
அர்செனல் வீரர்களான சீட் கொலசினாக் மற்றும் மெசட் ஓசில் இருவரையும் கார் திருடர்கள் கத்தி முனையில் மிரட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில்,போஸ்நியா மற்றும் ஹெர்சிகோவினா ஆகியா நாடுகளுக்காக ஆடும் கொலசினாக், கையில் கத்தியுடன் முகமூடி அணிந்திருக்கும் நபரை எதிர்கொள்வது பதிவாகியுள்ளது. இந்த இரு வீரர்களும் லண்டனில் இருக்கும் கொல்டன் க்ரீன் மாவட்டத்தில் வியாழனன்று காரை ஓட்டு சென்றனர்.
இதை தடுக்க வந்தார் ஓசில். ஆனால், அதற்குள் கொள்ளையர்கள் அவர்கள் கொண்டு வந்த சாக்கு மூட்டையில் இருந்து கற்கள் மற்றும் செங்கற்கள் எடுத்து காரின் கண்ணாடியை உடைக்க தொடங்கினார்கள்.
"இரு வீரர்களையும் தொடர்பு கொண்டோம். அவர்கள் இப்போது நலமாக உள்ளனர்" என்று அர்செனலின் செய்தி தொடர்பாளர் கூறினார்.
Get yourself a friend that fights for you the way Sead Kolasinac fights and defends Mesut Ozil.
— ThatNaijaYarn (@Thatnaijayarn) July 25, 2019
Give this guy a medal! pic.twitter.com/jzWSSuWMPA
கொள்ளையர்கள் குறித்து கொடுத்த தகவலை வீரர்கள் உறுதி செய்தனர் என்று போலீஸார் கூறினார்.
"மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர்கள் கார் ஓட்டி வந்த ஒருவரை கொள்ளையடிக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டது" போலீஸ் செய்தி தொடர்பாளர் ஏஃப்பியிடம் தெரிவித்தார்.
"இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. விசாரணை நடந்துகொண்டிருக்கிறது."
லண்டன் தெருக்களில் கால்பந்து வீரர்கள் தாக்கப்படுவது இது முதல் சம்பவம் அல்ல.
2016ம் ஆண்டு ஆண்டி கேரோல், முன்னாள் வெஸ்ட் ஹாம் வீரர், பயிற்சி முடிந்து வீடு திரும்பும் போது துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டார்.