செல்ஸே அணியுடன் இரண்டு வருடத்துக்கு புதிய ஒப்பந்தம் போட்ட டேவிட் லூயிஸ்!

Updated: 11 May 2019 14:22 IST

டேவிட் லூயிஸ் செல்ஸேயுடன் இரண்டு வருடத்துக்கான புதிய ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளார். இதனை செல்ஸே நேற்று உறுதி செய்தது.

David Luiz Signs New Two-Year Deal With Chelsea
டேவிட் லூயிஸ் 2021 வரையிலான புதிய ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளார் © Twitter @ChelseaFC

டேவிட் லூயிஸ் செல்ஸேயுடன் இரண்டு வருடத்துக்கான புதிய ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளார். இதனை செல்ஸே நேற்று உறுதி செய்தது. 32 வயதான இவருக்கு இந்த சீசனுடன் முந்தைய ஒப்பந்தம் முடிவடைகிறது. அதனால் அவர் 2021 வரையிலான புதிய ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளார். 48 போட்டிகளில் ஆடி 3 கோல்களை அடித்துள்ளார் இவர். மேலும் செல்ஸே அணியை ப்ரீமியர் லீக் போட்டியில் டாப் 4 இடத்தையும், யூரோப்பா பைனலுக்கும் தகுதி பெற வைத்தார்.

"இது மேலும் ஒருமுறை யூரோப்பியன் ஃபைனலில் ஆடுவதற்கான வாய்ப்பு. ப்ரீமியர் லீக்கில் டாப் 3 அணியில் ஒருவராக முடிக்க முயற்சி செய்வோம். அணியை சிறப்பாக செயல்பட வைப்போம்" என செல்ஸே இயக்குநர் மரினா க்ரான்வாஸ்கியா கூறினார்.

மேலும் அவர் லூயிஸ் அணிக்கு சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறார். "களத்திலும், களத்துக்கு வெளியேவும் அவரது அனுபவம் தேவை" என்றார்.

Comments
ஹைலைட்ஸ்
  • டேவிட் லூயிஸ் செல்ஸேயுடன் 2 வருடத்துக்கான ஒப்பந்தத்தை கையெழுத்திட்டார்
  • 32 வயதான இவருக்கு இந்த சீசனுடன் முந்தைய ஒப்பந்தம் முடிவடைகிறது
  • 48 போட்டிகளில் ஆடி 3 கோல்களை அடித்துள்ளார் டேவிட் லூயிஸ்
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக் கோப்பையை வெல்ல கோலிக்கு செல்ஸே வீரரின் வாழ்த்து!
உலகக் கோப்பையை வெல்ல கோலிக்கு செல்ஸே வீரரின் வாழ்த்து!
செல்ஸே அணியுடன் இரண்டு வருடத்துக்கு புதிய ஒப்பந்தம் போட்ட டேவிட் லூயிஸ்!
செல்ஸே அணியுடன் இரண்டு வருடத்துக்கு புதிய ஒப்பந்தம் போட்ட டேவிட் லூயிஸ்!
Advertisement