2வது டெஸ்ட்டில் படுதோல்வி… பேட்டிஙை நொந்துகொள்ளும் கோலி!

Updated: 13 August 2018 11:09 IST

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில், இங்கிலாந்திடம் இந்தியா படுதோல்வியடைந்துள்ளது

Virat Kohli Slams Batting Collapse, Admits India Were Outplayed By England
© AFP

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில், இங்கிலாந்திடம் இந்தியா படுதோல்வியடைந்துள்ளது. இது குறித்து வருத்தத்துடன் தனது கருத்தை தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி.

லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 9 ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியின் டாஸை இங்கிலாந்து அணி வெற்றி பெற்று பௌலிங் செய்யத் தீர்மானித்தது. முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்தாகவே, இரண்டாவது நாளில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. இந்திய அணி சார்பில் ஒரு பேட்ஸ்மேன் கூட, அரை சதம் கூட அடிக்காததால், 35.2 ஓவர்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து, நிதானமாக ரன் சேர்க்கத் தொடங்கியது. அந்த அணியின் பேர்ஸ்டோ 93 ரன்கள் எடுக்க, கிறிஸ் வோக்ஸ் 137 ரன்கள் குவித்தார். 88.1 ஓவர்களில் அந்த அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 396 ரன்கள் குவித்தது. 

தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விட்டதால் 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்கள் மட்டுமே சேர்த்தது இந்தியா. இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து, 2 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ‘ஒரு அணியாக நாங்கள் விளையாடியது குறித்து எனக்குப் பெருமையாக இல்லை. இங்கிலாந்து எங்களை விட மிக நன்றாக ஆடியது. அவர்களுக்குத் தான் முழு பாராட்டும் போய்ச் சேர வேண்டும். இங்கிலாந்தில் நிலவி வரும் சூழல் குறித்து புகார் தெரிவிக்க முடியாது. இதைப் போன்ற சூழலுக்கு உங்களை நீங்கள் தயார் செய்து கொள்ள வேண்டும். அவர்கள் மைதானத்தில் நிலவிய சூழலை மிகச் சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்டனர். குறிப்பாக இங்கிலாந்து பௌலர்கள் மிக அற்புதமாக பந்து வீசினர்’ என்று தெரிவித்தார். 

அவர் மேலும், ‘இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து நாங்கள் ஆடியது எங்களுக்கு எதிராக செயல்பட்டு விட்டது. அடுத்த முறை அதைத் திருத்திக் கொள்வோம்’ என்றார்.

இந்தப் போட்டியில் விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அது குறித்து அவர், ‘எனது கீழ் முதுகில் சற்று வலி இருக்கிறது. அது அடிக்கடி வந்து தொள்ளைக் கொடுக்கிறது. அதிக பணி சுமையால் அப்படி ஆகிறது. ஆனால், அடுத்தப் போட்டி வருவதற்கு முன்னர் 5 நாட்கள் ஓய்வு இருக்கிறது. இந்த சமயத்தில் அந்த வலி முழுமையாக குணமடையும்’ என்று தெளிவுபடுத்தினார்.

Comments
ஹைலைட்ஸ்
  • விராட், இந்தப் போட்டியில் 23 மற்றும் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார்
  • இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸுக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது
  • 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து 2-0 என்ற நிலையில் முன்னிலை
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியா vs ஆஸ்திரேலியா: 29வது ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார் ரோஹித் ஷர்மா!
இந்தியா vs ஆஸ்திரேலியா: 29வது ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார் ரோஹித் ஷர்மா!
கே.எல்.ராகுலை "பல பரிமாணம் கொண்ட வீரர்" என்றார் விராட் கோலி!
கே.எல்.ராகுலை "பல பரிமாணம் கொண்ட வீரர்" என்றார் விராட் கோலி!
இந்தியா vs ஆஸ்திரேலியா : 2-வது ஒருநாள் போட்டி ஸ்கோர் கார்டு!!
இந்தியா vs ஆஸ்திரேலியா : 2-வது ஒருநாள் போட்டி ஸ்கோர் கார்டு!!
India vs Australia 1st ODI: 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா!
India vs Australia 1st ODI: 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா!
IND vs AUS: விராட் கோலியின் உலக சாதனைக்கு இன்னும் ஒரு சதம் தேவை!
IND vs AUS: விராட் கோலியின் உலக சாதனைக்கு இன்னும் ஒரு சதம் தேவை!
Advertisement