‘உங்களைப் போலத்தான் நாங்களும்!’- ரசிகர்களுக்கு தவான் உருக்கமான வேண்டுகோள்

Updated: 07 September 2018 11:41 IST

இதுவரை டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிந்துள்ள நிலையில், கடைசி டெஸ்ட் மட்டும் இன்னும் பாக்கியுள்ளது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி, 1-3 என்ற கணக்கில் தோல்விகண்டுள்ளது

Shikhar Dhawan Shuts Down Trolls Who Criticised Team India
© AFP

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிந்துள்ள நிலையில், கடைசி டெஸ்ட் மட்டும் இன்னும் பாக்கியுள்ளது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி, 1-3 என்ற கணக்கில் தோல்விகண்டுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் பலர், அணியை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட நேரத்தில் தான் இந்திய தொடக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவான், தனது அதிகாரபூர்வ இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில் அவர், ‘சக வீரர்களுடன் முடிவற்ற மகிழ்ச்சி’ என்ற ரீதியில் புகைப்படத்துடன் எழுதியிருந்தார். படத்தில் தவான் உள்ளிட்ட இந்திய வீரர்கள் சிரித்துக் கொண்டிருப்பது போல் இருக்கிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Crazy boys and non-stop fun @hardikpandya93 .. With a priceless @rishabpant expression

A post shared by Shikhar Dhawan (@shikhardofficial) on

eepsekt

இந்த புகைப்படத்துக்குக் கீழ், ரசிகர்கள் ‘தோல்வி நேரத்தில் தான் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்களா?’ என்பது போல தொடர்ந்து கமென்ட்கள் போட்டு விமர்சித்துள்ளனர்.

இதனால் கடுப்பான தவான், ‘எதிர்மறையாக கருத்திட்டு வரும் மக்களுக்கு… உங்களைப் போலத்தான் நாங்களும் காயமடைந்திருக்கிறோம். எங்கள் தவறுகளில் இருந்து கற்றுக் கொண்டு முன்னேறிச் செல்ல முயல்கிறோம். ஒவ்வொரு முறை களத்துக்குப் போகும் போதும் எங்கள் நாட்டுக்காக முழு திறனையும் வெளிப்படுத்த முயற்சிக்கிறோம். அதே நேரத்தில் அடுத்தப் போட்டிக்கு முன்னர் நாங்கள் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். கடந்த காலத்தை எங்களால் மாற்ற முடியாது. அதனால் அடுத்தடுத்தப் போட்டிகளுக்கு கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். பயிற்சிக்குப் பிறகு சந்தோஷமாக சிரித்து மகிழ வேண்டும். அப்போது தான் அணியில் நேர்மறையான எண்ணம் இருக்கும். ஜெயிக்கும் போது மகிழ்ச்சியாக இருப்பது சுலபம். போராளிகள், தோல்வியடையும் போதும் நேர்மறையாக இருப்பர். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி’ என்று உருக்கமாக பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். இது வைரலாகி வருகிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
#Preview கடைசி ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா?
#Preview கடைசி ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா?
மேற்கிந்திய தீவுகள் வீரர்களுடன் தண்ணீரில் ஆட்டம் போடும் இந்திய வீரர்கள்!
மேற்கிந்திய தீவுகள் வீரர்களுடன் தண்ணீரில் ஆட்டம் போடும் இந்திய வீரர்கள்!
20ம் ஆண்டு கார்கில் தினம்: விளையாட்டு வீரர்கள் அஞ்சலி!
20ம் ஆண்டு கார்கில் தினம்: விளையாட்டு வீரர்கள் அஞ்சலி!
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கு முன் ஷிகர் தவான் தீவிர பயிற்சி!
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கு முன் ஷிகர் தவான் தீவிர பயிற்சி!
29வது பிறந்தநாளை கொண்டாடும் சஹாலுக்கு ட்விட்டரில் வாழ்த்து மழை!
29வது பிறந்தநாளை கொண்டாடும் சஹாலுக்கு ட்விட்டரில் வாழ்த்து மழை!
Advertisement