3வது டெஸ்ட்: பும்ராவின் பந்துவீச்சால் தவிடுபொடியான இங்கிலாந்து!

Updated: 22 August 2018 10:13 IST

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா அணி விளையாடி வரும் 3வது டெஸ்ட்டில், இந்தியா வெற்றி பெற இன்னும் ஒரு விக்கெட்டே தேவைப்படுகிறது

Jasprit Bumrah Wreaks Havoc To Put India On Brink Of Victory Against England
© AFP

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா அணி விளையாடி வரும் 3வது டெஸ்ட்டில், இந்தியா வெற்றி பெற இன்னும் ஒரு விக்கெட்டே தேவைப்படுகிறது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவின் ஜஸ்ப்ரீத் பும்ராவின் சிறப்பான பந்துவீச்சால் நிலைகுலைந்தது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரை விளையாடி முடித்து தற்போது, டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்விகண்டது. இதனால் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 18 ஆம் தேதி ட்ரென்ட் பிரிட்ஜில் தொடங்கியது. 

இந்த போட்டிக்கான டாஸை வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 329 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 97 ரன்கள் அடித்தார். தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்துக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சிக் காத்திருந்தது. இந்திய பந்துவீச்சாளர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த அணி சார்பில் பட்லர் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து லீட் ரன்களுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி மீண்டும் சிறப்பான பேட்டிஙை வெளிப்படுத்தியது. இம்முறை கேப்டன் விராட் கோலி சதமடிக்க, இந்திய 352 ரன்கள் எடுத்த போது டிக்ளர் செய்தது.

இமாலய இலக்கை அடையும் நோக்கில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது இங்கிலாந்து. இம்முறையும் இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பௌலிங்கிற்கு ஈடு கொடுக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர். பட்லர் மட்டும் அந்த அணி சார்பில் சதம் அடித்தார். 

நேற்று ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட்டுகளுக்கு 311 ரன்கள் எடுத்திருந்தது. இன்னும் ஒரு நாள் ஆட்டம் பாக்கி என்பதால், இந்தியா எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பும்ரா இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • இன்னுப் ஒரு விக்கெட் எடுத்தால் இந்தியா வெற்றி பெறும்
  • பட்லர் மட்டும் இங்கிலாந்து சார்பில் சதமடித்துள்ளார்
  • பும்ரா, 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
11 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை- ‘எமோஷனல்’ கிங் கோலி!
11 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை- ‘எமோஷனல்’ கிங் கோலி!
கிரிக்கெட் களத்தின் வெளியிலும் சாதனை படைத்த விராத் கோலி...!
கிரிக்கெட் களத்தின் வெளியிலும் சாதனை படைத்த விராத் கோலி...!
இந்தியாவுக்கு எதிரான மேற்கிந்திய தீவுகள் ஏ அணியில் யார் யாருக்கு இடம்?
இந்தியாவுக்கு எதிரான மேற்கிந்திய தீவுகள் ஏ அணியில் யார் யாருக்கு இடம்?
"ரவி சாஸ்திரியின் நியமனம் கேலிக்கூத்தாக உள்ளது" - பிசிசிஐயை விமர்சிக்கும் ரசிகர்கள்!
"ரவி சாஸ்திரியின் நியமனம் கேலிக்கூத்தாக உள்ளது" - பிசிசிஐயை விமர்சிக்கும் ரசிகர்கள்!
பெயரில் எழுத்துப்பிழை... கடுமையாக விமர்சிக்கப்படும் சி.ஏ.சி!
பெயரில் எழுத்துப்பிழை... கடுமையாக விமர்சிக்கப்படும் சி.ஏ.சி!
Advertisement