4வது டெஸ்ட் போட்டி: இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து, தொடரை கைப்பற்றியது!

Updated: 03 September 2018 11:02 IST

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரை விளையாடி முடித்து தற்போது, டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது

India vs England: Moeen Ali Annihilates India As England Seal Five-Match Series
© Reuters

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து, 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரை விளையாடி முடித்து தற்போது, டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்விகண்டது. ஆனால், மூன்றாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை உயிர்ப்போடு வைத்திருந்தது. இந்நிலையில் 4வது டெஸ்ட், ஆகஸ்ட் 30 ஆம் தேதி சவுத்தாம்டனில் தொடங்கியது.

இந்தப் போட்டிக்கான டாஸை வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த அணியின் முதல் இன்னிங்ஸில் சாம் குர்ரான் மட்டுமே அரை சதத்தைக் கடந்தார். இதனால் இங்கிலாந்து, 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா, நல்ல தொடக்கத்தை கொடுத்தது. அணியின் புஜாரா, சதம் அடித்தார். கேப்டன் விராட் கோலி, 46 ரன்கள் எடுத்தார். இதனால், இந்திய அணி, அதிக ஸ்கோர் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்த வந்த பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து ஆடவில்லை. இதனால் 273 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. 

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து, 271 ரன்கள் அடித்தது. இதனால், மதிக்கத்தக்க லீட் ஸ்கோர் எடுத்தது இங்கிலாந்து.

இதையடுத்து 200 ப்ளஸ் லீட் ஸ்கோரை சேஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சிக் காத்திருந்தது. தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ரஹானே மற்றும் கோலி மட்டும் பார்ட்னர்ஷிப் போட்டு அரைசதங்கள் கடந்தனர். ஆனால், அடுத்தடுத்த வந்த வீரர்கள் நிலைத்து ஆடவில்லை. இதனால், 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இந்திய அணி. 

எனவே, இங்கிலாந்து அணி இந்தப் போட்டியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தொடரையும் கைப்பற்றியது.

இங்கிலாந்து சார்பில் மொயீன் அலி, இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
4வது டெஸ்ட் போட்டி: இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து, தொடரை கைப்பற்றியது!
4வது டெஸ்ட் போட்டி: இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து, தொடரை கைப்பற்றியது!
‘டெஸ்ட் கிரிக்கெட்தான் மகத்துவமானது!’- மனம் திறந்த விராட் கோலி
‘டெஸ்ட் கிரிக்கெட்தான் மகத்துவமானது!’- மனம் திறந்த விராட் கோலி
Advertisement