3-வது டெஸ்ட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

Updated: 22 August 2018 16:36 IST

பலமான நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்து டிக்லேர் செய்தது

3rd Test: India Win By 203 Runs At Trent Bridge, England Lead Series 2-1
© AFP

இங்கிலாந்து அணியை 203 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி, டெஸ்ட் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது இந்தியா. ட்ரென்ட் பிரிட்ஜில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இங்கிலாந்துக்கு 521 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா. ஆட்டத்தின் கடைசி நாளான இன்று 317 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து அணி. இந்திய தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

நேற்றைய நான்காம் நாள் ஆட்ட முடிவில் 311 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்திருந்தது இங்கிலாந்து. இன்று ஆட்டம் தொடங்கி 17 பந்துகள் மட்டுமே வீசப்பட்டது. அதற்குள் 10-வது விக்கெட்டை இழந்து தோல்வி அடைந்தது இங்கிலாந்து. 

முதல் இன்னிங்ஸில் இந்தியா 329 ரன்கள் குவித்தது. கோலி 97 ரன்களும், ரஹானே 81 ரன்களும் குவித்தனர். அடுத்த ஆடிய இங்கிலாந்து அணி 161 ரன்களுக்கு சுருண்டது. அபாரமாக பந்து வீசிய ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்களை வீழ்த்தினார். 

பலமான நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்து டிக்லேர் செய்தது. கோலி அபாரமாக பேட் செய்து சதம் அடித்தார். இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இம்முறை ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்து வீரர்களை துளைத்து எடுத்தார். அவர் 85 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார். 

தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு இந்திய அணி சிறப்பான வெற்றியின் மூலம் மீண்டும் தொடரில் தன்னை நிலை நிறுத்தியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 2 போட்டிகளும் இந்தியா ஒரு போட்டியிலும் வென்றுள்ளது. இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் இருக்கின்றன.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
வீடியோ: குட்டி இரசிகரின் ஆசையை நிறைவேற்றிய கேப்டன் கோஹ்லி
வீடியோ: குட்டி இரசிகரின் ஆசையை நிறைவேற்றிய கேப்டன் கோஹ்லி
"டெஸ்ட் வெற்றி கேரள மக்களுக்கு சமர்ப்பணம்" - கேப்டன் கோலி நெகிழ்ச்சி
"டெஸ்ட் வெற்றி கேரள மக்களுக்கு சமர்ப்பணம்" - கேப்டன் கோலி நெகிழ்ச்சி
3-வது டெஸ்ட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா
3-வது டெஸ்ட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா
3வது டெஸ்ட்: பும்ராவின் பந்துவீச்சால் தவிடுபொடியான இங்கிலாந்து!
3வது டெஸ்ட்: பும்ராவின் பந்துவீச்சால் தவிடுபொடியான இங்கிலாந்து!
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டி: 23வது சதம் அடித்து விராத் மிரட்டல்
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டி: 23வது சதம் அடித்து விராத் மிரட்டல்
Advertisement