கோட்லா களத்தில் தல தோனி... ரசிகர்களின் இதயத்தில் ஸிவா தோனி!

Updated: 27 March 2019 18:15 IST

சென்னை சூப்பர் கிங்ஸ், 19.4 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

IPL 2019: MS Dhoni
தோனியின் மகள் ஸிவா நேற்று டெல்லிக்கு எதிராக நடந்த போட்டியில் அனைவரது இதயங்களையும் வென்றார். © BCCI/IPL

தோனி உலகின் மிகவும் அதிக ரசிகர்களை கொண்ட கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். அவரது மகள் ஸிவா தோனிப்போலவே பிரபலமாகி வருகிறார். தோனியின் மகள் ஸிவா நேற்று டெல்லிக்கு எதிராக நடந்த போட்டியில் அனைவரது இதயங்களையும் வென்றார். மைதானத்தில் தோனி ஆடும் போது 'கோ பாப்பா' என உற்சாகமாக கோஷமிட்டது இணையத்தில் வைரலானது.

முன்னதாக டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த டெல்லி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் குவித்தது. டெல்லி தரப்பில் தவான் 51, ப்ரித்வி ஷா 24, பன்ட் 25 ரன்கள் குவித்தனர். சென்னை தரப்பில் ப்ராவோ பன்ட், இங்ராம், தவான் என 3 முன்னணி வீரர்களை வீழ்த்தினார். தாஹிர், ஜடேஜா, சஹார் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

ஒரு கட்டத்தில் 120 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வலுவான நிலையில் இருந்தது. அதன்பின் பன்ட் அவுட் ஆனதும் அப்படியே ரன் ரேட் குறைந்து தடுமாறியது டெல்லி.

அடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ், 19.4 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணியின் வாட்சன் 44, ரெய்னா 30, ஜாதவ் 27 ரன்கள் குவித்தனர். தோனி 32 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். டெல்லி தரப்பில் மிஸ்ரா 2 விக்கெட்டுகளையும், இஷாந்த்,ரபாடா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வரும் ஞாயிறன்று எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • தோனி சிஎஸ்கே அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்
  • பன்ட் அவுட் ஆனதும் அப்படியே ரன் ரேட் குறைந்து தடுமாறியது டெல்லி
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது
தொடர்புடைய கட்டுரைகள்
கிரிக்கெட் களத்தின் வெளியிலும் சாதனை படைத்த விராத் கோலி...!
கிரிக்கெட் களத்தின் வெளியிலும் சாதனை படைத்த விராத் கோலி...!
லடாக்கில் சுதந்திர தினத்தை கொண்டாடிய தோனி!
லடாக்கில் சுதந்திர தினத்தை கொண்டாடிய தோனி!
ராணுவத்திலிருந்து வீடு திரும்பும் தோனிக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
ராணுவத்திலிருந்து வீடு திரும்பும் தோனிக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
டி20 போட்டியில் அதிக ரன்கள்... தோனியின் சாதனையை முந்திய ரிஷப் பன்ட்!
டி20 போட்டியில் அதிக ரன்கள்... தோனியின் சாதனையை முந்திய ரிஷப் பன்ட்!
வைரலாகும் தோனி பாடும் வீடியோ... எங்கே எடுக்கப்பட்டது? #FactChecked
வைரலாகும் தோனி பாடும் வீடியோ... எங்கே எடுக்கப்பட்டது? #FactChecked
Advertisement