அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்து பாக்., வீரர் புதிய சாதனை

Updated: 23 July 2018 12:31 IST

21 போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்ததே சாதனையாக இருந்தது

Zimbabwe vs Pakistan, 5th ODI: Fakhar Zaman Sets New ODI Record
© Twitter

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ஃபகர் ஜமான் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதிரடியாக தன் திறமையை காட்டி வரும் ஜமான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்த குறுகிய காலத்துக்குள் பல சாதனைகளை படைத்து வருகிறார்.

இன்று ஜிம்பாப்வே பாகிஸ்தானுடனான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். ஒரு நாள் போட்டியில் மிக குறைந்த போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை தன் வசப்படுத்தியுள்ளார் ஜமான். அவர் இந்த சாதனையை வெறும் 18 போட்டிகளில் செய்துள்ளார்.

இதற்கு முன் விவ்யன் ரிச்சர்ட்ஸ், கெவின் பீட்டர்சன், டிராட், டிகாக், ஆகியோர் 21 போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்ததே சாதனையாக இருந்தது. இந்திய கேப்டன் விராத் கோல் 24 போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிம்பாப்வே உடன் நடந்து வரும் இந்த தொடரின் 4-வது போட்டியில் ஜமான் 210 ரன்கள் குவித்து, உலக அளவில் இரு நூறு ரன்களைக் கடந்த ஆறாவது வீரரானார். இந்த தொடரில் மட்டும் 450 ரன்களுக்கும் மேல் குவித்துள்ளார் அவர்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்து பாக்., வீரர் புதிய சாதனை
அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்து பாக்., வீரர் புதிய சாதனை
முதல் விக்கெட்டிற்கு 304 ரன்கள் குவித்து, பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் சாதனை!
முதல் விக்கெட்டிற்கு 304 ரன்கள் குவித்து, பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் சாதனை!
Advertisement