ஹர்திக் பாண்ட்யாவின் வாழ்த்துக்கு அமைதியாக பதிலளித்த ஜாகீர் கான்!

Updated: 09 October 2019 15:57 IST

ஜாகீர் கான் ஹர்திக் பாண்ட்யாவுக்கு அமைதியாக பதிலளித்தார். அந்த போட்டியில் ஆல் ரவுண்டர் எதிர்கொண்ட அடுத்த பந்தை ஜாகீர் கான் நினைவுபடுத்துகிறார்.

Zaheer Khan Comes Up With Epic Reply To Hardik Pandya
சமீபத்தில் பாண்ட்யா முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது அவர் குணமடைந்து வரும் வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். © AFP

ஜாகீர் கான் பிறந்தநாளுக்கு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால், அது ரசிகர்கள் மத்தியில் "அவமரியாதையான" ட்விட் என பேசப்பட்டது. சமூக வலைதளங்களில் ஹர்திக் பாண்ட்யாவை வறுத்தெடுக்க தொடங்கினர். திங்களன்று, ஹார்திக் பாண்ட்யா ஜாகீர் கானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை ட்வீட் செய்தார். ஒரு வீடியோவை வெளியிட்டார், அதில் ஜாகீர் கான் வீசிய பந்தை சிக்ஸர் அடித்தார். ஹார்டிக் பாண்ட்யாவின் ட்விட் ரசிகர்களை கோபப்படுத்தியது. ஆனால் அதே வேளையில், ஜாகீர் கான் அமைதியாக பதிலளித்தார். அந்த போட்டியில் ஆல் ரவுண்டர் எதிர்கொண்ட அடுத்த பந்தை ஜாகீர் கான் நினைவுபடுத்துகிறார்.

"ஹாஹாஹா... வாழ்த்துக்கு மிகவும் நன்றி @hardikpandya7 எனது பேட்டிங் திறன்கள் ஒருபோதும் உங்களுடையது போல் சிறப்பாக இருக்க முடியாது, ஆனால் இந்த போட்டியில் நீங்கள் என்னிடமிருந்து எதிர்கொண்ட அடுத்த டெலிவரி போலவே பிறந்தநாள் நன்றாக இருந்தது," என்று ஜாகீர் கான் ட்விட்டரில் தெரிவித்தார்.

"பிறந்தநாள் வாழ்த்துகள் ஜாக்... நான் இங்கு செய்ததை போலவே நீங்களும் கொண்டாடுங்கள்." என்று ஹர்திக் பாண்ட்யா பதிவிட்டார்.

சமீபத்தில் பாண்ட்யா முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது அவர் குணமடைந்து வரும் வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

2018ம் ஆண்டு இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும், 2019 உலகக் கோப்பையிலும் அவருக்கு சிகிச்சையளித்த அதே மருத்துவரால் முதுகெலும்பைப் பரிசோதிக்க புதன்கிழமை ஹர்திக் பாண்ட்யா யுனைடெட் கிங்டம் புறப்பட்டார்.

இதற்கிடையில், ஹார்டிக் பாண்ட்யா, கடைசியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இடம்பெற்றார். அங்கு அவர் முதுகில் ஏற்பட்ட காயம் மோசமானது.

"குழந்தை அடிகள்... என்னுடைய உடற்தகுதி பெற வழி இங்கே தொடங்குகிறது. எல்லோருடைய ஆதரவுக்கும், வாழ்த்துகளுக்கு நன்றி," என்று வீடியோவுடன் பதிவிட்டார்.

தென்னாப்பிரிக்கர்களுக்கு எதிராக நடந்து வரும் மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை.

நவம்பர் 3ம் தேதி தொடங்கி இந்தியாவில் நடைபெறவுள்ள பங்களாதேஷுக்கு எதிரான டி20 தொடரை ஹார்டிக் பாண்ட்யா தவறவிடுவார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"பும்ரா எங்கே?" என்ற ரசிகரின் கேள்விக்கு மும்பை இந்தியன்ஸின் பதில்!
"பும்ரா எங்கே?" என்ற ரசிகரின் கேள்விக்கு மும்பை இந்தியன்ஸின் பதில்!
விஜய் சங்கரின் சட்டையில்லா புகைப்படத்தை ட்ரோல் செய்த ரசிகர்கள்!
விஜய் சங்கரின் சட்டையில்லா புகைப்படத்தை ட்ரோல் செய்த ரசிகர்கள்!
"நீங்கள் வந்தது மகிழ்ச்சி" - நீதா அம்பானிக்கு நன்றி தெரிவித்த ஹர்திக் பாண்ட்யா!
"நீங்கள் வந்தது மகிழ்ச்சி" - நீதா அம்பானிக்கு நன்றி தெரிவித்த ஹர்திக் பாண்ட்யா!
ஹர்திக் பாண்ட்யாவின் வாழ்த்துக்கு அமைதியாக பதிலளித்த ஜாகீர் கான்!
ஹர்திக் பாண்ட்யாவின் வாழ்த்துக்கு அமைதியாக பதிலளித்த ஜாகீர் கான்!
ஜாகீர் கான் பிறந்தநாளுக்கு ஹர்திக் பாண்ட்யாவின் சர்ச்சையான ட்விட்!
ஜாகீர் கான் பிறந்தநாளுக்கு ஹர்திக் பாண்ட்யாவின் சர்ச்சையான ட்விட்!
Advertisement