மும்பை இந்தியன்ஸ் வரவேற்பு... தன்னை தானே கலாய்த்துக்கொண்ட யுவராஜ் சிங்!

Updated: 15 March 2019 17:51 IST

யுவராஜ்ஜை வரவேற்று மும்பை இந்தியன்ஸ் அணியின் ட்விட்டர் பக்கம் அவர் பயிற்சிக்கு செல்லும் வீடியோவை பதிவிட்டிருந்தது.

Yuvraj Singh Trolls Himself For Slow Pace During Mumbai Indians
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு ஒரு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமாகியுள்ளார். © Twitter

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிற‌ங்கவுள்ளார் இந்திய அதிரடி வீரர் யுவராஜ் சிங். யுவராஜ்ஜை வரவேற்று மும்பை இந்தியன்ஸ் அணியின் ட்விட்டர் பக்கம் அவர் பயிற்சிக்கு செல்லும் வீடியோவை பதிவிட்டிருந்தது. அதில் பெவிலியனிலிருந்து வலை பயிற்சிக்கு நடந்து செல்லும்படியாக காட்சி இருக்கும். இந்த ட்விட்டுக்கு யுவராஜ் "கொஞ்சம் வேகமாக நடந்து செல்லுங்கள்" என அவரை அவரே கலாய்த்து ட்விட் செய்தது வைரலாகியுள்ளது. 

ஐபிஎல் தொட‌ரின் 12வது சீசனுக்கு அடிப்படை விலைக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடவுள்ளார் யுவராஜ் சிங். 

சண்டிகரை சேர்ந்த ஆல் ரவுண்டர் ஐபிஎல் போட்டிக்கு முன்பாக ஆடிய டிஒய் பாட்டில் டி20 தொடரில் 57 பந்தில் 80 ரன்கள் குவித்து அசத்தினார். 

2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ஆடிய யுவராஜ் ,அதன் பின் அணியில் இடம் கிடைக்காமல் தடுமாறினார்.

கடைசியாக 2017 ஜூனில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியிலும், 2017 பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிராக டி20 போட்டியிலும் ஆடினார் யுவராஜ்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு ஒரு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமாகியுள்ளார். சென்ற வருடம் அஷ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியில் ஆடிய யுவராஜ் 8 போட்டிகளில் வெறும் 65 ரன்கள் எடுத்தார்.

Comments
ஹைலைட்ஸ்
  • தன்னைத் தானே கலாய்த்து கொண்ட யுவராஜ் சிங்
  • யுவராஜ் சிங், மும்பை அணிக்கு ஒரு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமாகியுள்ளார்
  • மும்பை இந்தியன்ஸ் ட்விட்டர் பக்கத்தில் யுவராஜின் பயிற்சி வீடியோ வெளியானது
தொடர்புடைய கட்டுரைகள்
"ஸ்டூவர்ட் பந்தில் யுவராஜ் நிகழ்த்திய மேஜிக்" - நினைவுகூர்ந்த ரவி சாஸ்திரி!
"ஸ்டூவர்ட் பந்தில் யுவராஜ் நிகழ்த்திய மேஜிக்" - நினைவுகூர்ந்த ரவி சாஸ்திரி!
"6 பந்தில் 6 சிக்ஸ்": யுவராஜ் சிங்கின் டி20 சாதனை நிகழ்ந்த நாள் இன்று!
"6 பந்தில் 6 சிக்ஸ்": யுவராஜ் சிங்கின் டி20 சாதனை நிகழ்ந்த நாள் இன்று!
"இந்தியாவுக்கு நம்பர் 4 பேட்ஸ்மேன் தேவையில்லை" - ஹர்பஜன் சிங் ட்விட்டுக்கு பதிலளித்த யுவராஜ் சிங்!
"இந்தியாவுக்கு நம்பர் 4 பேட்ஸ்மேன் தேவையில்லை" - ஹர்பஜன் சிங் ட்விட்டுக்கு பதிலளித்த யுவராஜ் சிங்!
சோயப் அக்தரை பங்கமாக கலாய்த்த யுவராஜ் சிங்!
சோயப் அக்தரை பங்கமாக கலாய்த்த யுவராஜ் சிங்!
"ஃபிட்னஸ் சிலை" - கோலி மற்றும் பும்ராவை புகழ்ந்த யுவராஜ் சிங்!
"ஃபிட்னஸ் சிலை" - கோலி மற்றும் பும்ராவை புகழ்ந்த யுவராஜ் சிங்!
Advertisement