‘இது என்னப்பா யுவராஜுக்கு வந்த சோதனை’- கம்-பேக் போட்டியில் இப்படி அவுட் ஆகிட்டாரே #Video

Updated: 26 July 2019 15:37 IST

அடி முதுகுப் பகுதியில் வலி இருந்ததால், முதலில் இருந்தே யுவராஜ் பேட்டிங் செய்ய திணறினார்

Yuvraj Singhs Bizarre Dismissal In Global T20 Canada Debut Game - Watch
யுவராஜ், கெய்ல் தவிர இந்தத் தொடரில் கீரான் பொலார்டு, ப்ரெண்டன் மெக்கலம், ஆன்ட்ரே ரஸல் உள்ளிட்டவர்களும் பங்கேற்கின்றனர்.  © Screengrab @hotstartweets

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வு அறிவித்த யுவராஜ் சிங், கிரிக்கெட் களத்துக்கு திரும்பியுள்ளார். அவர் தற்போது க்ளோபல் டி20 கனடா 2019 தொடரில் பங்கேற்று வருகிறார். கனடாவில் நடக்கும் இந்தப் போட்டியில் டொரான்டோ நேஷனல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார் யுவராஜ். 

கடந்த ஜூன் 10 ஆம் தேதி, தனது ஓய்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டார் யுவராஜ். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதால், வேறு நாடுகளில் நடக்கும் தொடர்களில் அவர் பங்கேற்கும் சூழல் ஏற்பட்டது. க்ளோபல் டி20 கனடா 2019 தொடரின் முதல் போட்டி டொரான்டோ நேஷனல்ஸுக்கும் வாங்கூவர் நைட்ஸுக்கும் இடையில் நடந்தது. நைட்ஸின் கேப்டன் கிறிஸ் கெய்ல் என்பது குறிப்பிடத்தக்கது. 

நேற்று நடந்த இந்தப் போட்டியில் நைட்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. 4வது பேட்ஸ்மேனாக களமிறங்கினார் நேஷனல்ஸ் அணியின் கேப்டன் யுவராஜ். அடி முதுகுப் பகுதியில் வலி இருந்ததால், முதலில் இருந்தே யுவராஜ் பேட்டிங் செய்ய திணறினார். 27 பந்துகள் விளையாடி 14 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் யுவராஜ். ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸின் 17வது ஓவரை வீசினார் ரிஸ்வான் கீமா. அப்போது பேட்டிங் செய்த யுவராஜ், க்ரீஸிலிருந்து வெளியே வந்து ஆட பார்த்தார். எதிர்பாராத விதமாக பந்து எட்ஜ் ஆனது. அந்த எட்ஜ் கேட்ச்சை கீப்பரும் பிடிக்கவில்லை. கீப்பர் மீது பட்டபிறகு, அந்த பந்து ஸ்டம்பில் பட்டது. இதனால், களத்திலிருந்து வெளியேறினார் யுவராஜ். ஆனால், ரிப்ளேயில் பார்க்கும்போது யுவராஜ் சிங், அவுட் ஆகவில்லை என்று தெரிந்தது. ஆக மொத்தம், தனது கம்-பேக் முதல் போட்டியில் வித்தியாசமான முறையில் யுவராஜ் சிங், அவுட்டாகி வெளியேறியது, கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது.

யுவராஜ், கெய்ல் தவிர இந்தத் தொடரில் கீரான் பொலார்டு, ப்ரெண்டன் மெக்கலம், ஆன்ட்ரே ரஸல் உள்ளிட்டவர்களும் பங்கேற்கின்றனர். 

2011 உலகக் கோப்பைத் தொடரின் போது யுவராஜுக்கு புற்று நோய் இருப்பது தெரியவந்தது. ஆனால், அவர் தொடர்ந்து தொடரில் ஜொலித்து, கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார். இந்தியா, உலகக் கோப்பையை 28 ஆண்டுகளுக்குப் பின்னர் வெல்வதற்கு யுவராஜ் முக்கிய பங்காற்றினார். 

யுவராஜ், 2000 ஆம் ஆண்டு, அக்டோபரில் இந்தியா சார்பில் முதன்முறையாக ஒருநாள் போட்டியில் விளையாடினார். தொடர்ந்து 2003 அக்டோபரில் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். 2007 ஆம் ஆண்டு நடந்த டி20 கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றார் யுவராஜ். 


 

Comments
ஹைலைட்ஸ்
  • கனடாவில் நடக்கும் க்ளோபல் டி20 தொடரில் விளையாடி வருகிறார் யுவராஜ்
  • டொரான்டோ நேஷ்னல்ஸ் அணியின் கேப்டன் யுவராஜ்தான்
  • யுவராஜ் அணியில், ப்ரெண்டன் மெக்கலமும் இருக்கிறார்
தொடர்புடைய கட்டுரைகள்
யுவராஜ் சிங் எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட சச்சின் டெண்டுல்கர்!
யுவராஜ் சிங் எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட சச்சின் டெண்டுல்கர்!
“என்னைப் போன்ற வீரர் இவர்” - ஆஸி.வீரர் குறித்து பேசிய டெண்டுல்கர்!
“என்னைப் போன்ற வீரர் இவர்” - ஆஸி.வீரர் குறித்து பேசிய டெண்டுல்கர்!
"சிக்ஸர் கிளப்" - டாம் அண்ட் ஜெர்ரி படத்துடன் லியோ கார்ட்டரை வரவேற்ற யுவராஜ் சிங்!
"சிக்ஸர் கிளப்" - டாம் அண்ட் ஜெர்ரி படத்துடன் லியோ கார்ட்டரை வரவேற்ற யுவராஜ் சிங்!
"யுவராஜ் சிங், நான், சேவாக் 2015 உலகக் கோப்பையை விளையாடியிருக்க வேண்டும்" - ஹர்பஜன் சிங்
"யுவராஜ் சிங், நான், சேவாக் 2015 உலகக் கோப்பையை விளையாடியிருக்க வேண்டும்" - ஹர்பஜன் சிங்
வீடியோ பகிர்ந்து யுவராஜ் சிங்கின் 38வது பிறந்தநாளுக்கு வாழ்த்திய ஐசிசி!
வீடியோ பகிர்ந்து யுவராஜ் சிங்கின் 38வது பிறந்தநாளுக்கு வாழ்த்திய ஐசிசி!
Advertisement