Listen to the latest songs, only on JioSaavn.com
 

Web Series-ல் மனைவி ஹசல் கீச்சுடன் நடிக்கவிருக்கும் யுவராஜ் சிங்!

Updated: 19 February 2020 16:01 IST

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், தன்னுடைய மனைவி ஹசல் கீச் மற்றும் சகோதரர் ஜோராவர் சிங் ஆகியோருடன் இணைந்து வெப் சீரிஸில் நடிக்கவுள்ளார்.

Yuvraj Singh Set To Star In A Web Series Along With Wife Hazel Keech
யுவராஜ் சிங் கடந்த ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார். © Instagram

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், தன்னுடைய மனைவி ஹசல் கீச் மற்றும் சகோதரர் ஜோராவர் சிங் ஆகியோருடன் இணைந்து வெப் சீரிஸில் நடிக்கவுள்ளார். இந்த வெப் சீரிஸ் அசாமை தளமாகக் கொண்ட ட்ரீம் ஹவுஸ் புரொடக்ஷன் ஆதரிக்கிறது. இதில், ஜோராவர் முன்னிலை வகிப்பார். மேலும் அவரது தாயார் ஷப்னம் சிங்கும் இந்த திட்டத்துடன் தொடர்புடையவர் என்று தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து நிதா ஷர்மா, குவஹாத்தியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஷப்னம், வலைத் தொடருடன் இணைந்திருப்பது மிகவும் பெருமையாகவும் உற்சாகமாகவும் இருப்பதாகக் கூறினார்.

“இந்த உலகம் உன்மையான யுவராஜ் சிங் மற்றும் ஜோராவர் சிங் ஆகியோரை பார்க்கும். வெப் சீரிஸின் மையப் பாத்திரம் எனது இளைய மகன் ஜோராவரை மையமாகக் கொண்டுள்ளது, மேலும் ஒரு தாயாக, எனது மகன்கள் மற்றும் மருமகள் ஆகியோரை பற்றி நான் பெருமைப்படுகிறேன்,” என்று அவர் கூறினார்

அக்‌ஷய் குமாரின் வரவிருக்கும் ‘பச்சன் பாண்டே' திரைப்படத்தை எழுதிய பாலிவுட் எழுத்தாளர் விபின் யூனியலும் இந்த திட்டத்தில் இணைந்துள்ளார்.

மேலும் பல பாலிவுட் நடிகர்கள் நடிகர்கள் உடன் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, 

குவாஹாதியில் டி-சீரிஸ் ஸ்டேஜ்வொர்க் அகாடமி (டிஎஸ்ஏ) என்ற திறமைமிக்க தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் முழு வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த மாணவர்களும் இப்போது வரவிருக்கும் அனைத்து திட்டங்களிலும் ஈடுபடுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

“முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் அவரது சகோதரர் ஜோராவர் சிங் ஆகியோர் இடம்பெறும் வெப் சீரிஸை உருவாக்குவது பெருமைமிக்க விஷயம். டி சீரிஸ் ஸ்டேஜ் ஒர்க்ஸ் அகாடமி மற்றும் ட்ரீம் ஹவுஸ் புரொடக்‌ஷனின் பார்வையைத் தொடர்ந்து, அசாமின் இளம் திறமைகளை அடையாளம் காண்டு ஒரு தளத்தை வழங்குவதே எங்கள் நோக்கம்” என்று ஷர்மா கூறினார்.

Comments
ஹைலைட்ஸ்
  • யுவராஜ் சிங் தனது மனைவியுடன் ஒரு வெப் சீரிஸில் நடிக்க உள்ளார்
  • யுவராஜ் சிங்கின் சகோதரர் சீரிஸில் முன்னிலை வகிப்பார்
  • கடந்த ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார்
தொடர்புடைய கட்டுரைகள்
“ என்னுடைய கிரிக்கெட் கிரஷ் இவர் தான்” - யுவராஜ் சிங்கிடம் வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா!
“ என்னுடைய கிரிக்கெட் கிரஷ் இவர் தான்” - யுவராஜ் சிங்கிடம் வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா!
"இப்பல்லாம் சீனியர்ஸுக்கு அந்த அளவுக்கு மரியாதை இல்லப்பா!"- ரோகித்திடம் நொந்து கொண்ட யுவ்ராஜ்
"இப்பல்லாம் சீனியர்ஸுக்கு அந்த அளவுக்கு மரியாதை இல்லப்பா!"- ரோகித்திடம் நொந்து கொண்ட யுவ்ராஜ்
2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டெண்டுல்கர் தோனிக்கு அளித்த முக்கிய ஆலோசனை!
2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டெண்டுல்கர் தோனிக்கு அளித்த முக்கிய ஆலோசனை!
கோலி, டெண்டுல்கர் உட்பட 40 விளையாட்டு வீரர்களுடன் வீடியோ மூலம் உரையாடிய மோடி!
கோலி, டெண்டுல்கர் உட்பட 40 விளையாட்டு வீரர்களுடன் வீடியோ மூலம் உரையாடிய மோடி!
“ஜூனியர், சீனியர் லெஜண்ட்...” - யுவராஜ் சிங்- ரவி சாஸ்திரி இடையே நடந்த ட்விட்டர் உரையாடல்!
“ஜூனியர், சீனியர் லெஜண்ட்...” - யுவராஜ் சிங்- ரவி சாஸ்திரி இடையே நடந்த ட்விட்டர் உரையாடல்!
Advertisement