‘யுவராஜ் ரிட்டர்ன்ஸ்!’- ஓய்வுக்குப் பின்னர் கிரிக்கெட்டுக்கு கம்-பேக் கொடுக்கிறார்

Updated: 26 July 2019 10:06 IST

கடந்த ஜூன் 10 ஆம் தேதி, தனது ஓய்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டார் யுவராஜ்.

Yuvraj Singh Returns To T20 Action After International Retirement
யுவராஜ், 2000 ஆம் ஆண்டு, அக்டோபரில் இந்தியா சார்பில் முதன்முறையாக ஒருநாள் போட்டியில் விளையாடினார். © Twitter

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வு அறிவித்த யுவராஜ் சிங், கிரிக்கெட் களத்துக்கு திரும்பியுள்ளார். அவர் தற்போது க்ளோபல் டி20 கனடா 2019 தொடரில் பங்கேற்று வருகிறார். கனடாவில் நடக்கும் இந்தப் போட்டியில் டொரான்டோ நேஷனல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார் யுவராஜ். 

கடந்த ஜூன் 10 ஆம் தேதி, தனது ஓய்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டார் யுவராஜ். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதால், வேறு நாடுகளில் நடக்கும் தொடர்களில் அவர் பங்கேற்கும் சூழல் ஏற்பட்டது. க்ளோபல் டி20 கனடா 2019 தொடரின் முதல் போட்டி டொரான்டோ நேஷனல்ஸுக்கும் வாங்கூவர் நைட்ஸுக்கும் இடையில் நடந்தது. நைட்ஸின் கேப்டன் கிறிஸ் கெய்ல் என்பது குறிப்பிடத்தக்கது. 

யுவராஜ், கெய்ல் தவிர இந்தத் தொடரில் கீரான் பொலார்டு, ப்ரெண்டன் மெக்கலம், ஆன்ட்ரே ரஸல் உள்ளிட்டவர்களும் பங்கேற்கின்றனர். 

2011 உலகக் கோப்பைத் தொடரின் போது யுவராஜுக்கு புற்று நோய் இருப்பது தெரியவந்தது. ஆனால், அவர் தொடர்ந்து தொடரில் ஜொலித்து, கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார். இந்தியா, உலகக் கோப்பையை 28 ஆண்டுகளுக்குப் பின்னர் வெல்வதற்கு யுவராஜ் முக்கிய பங்காற்றினார். 

யுவராஜ், 2000 ஆம் ஆண்டு, அக்டோபரில் இந்தியா சார்பில் முதன்முறையாக ஒருநாள் போட்டியில் விளையாடினார். தொடர்ந்து 2003 அக்டோபரில் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். 2007 ஆம் ஆண்டு நடந்த டி20 கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றார் யுவராஜ். 

Comments
ஹைலைட்ஸ்
  • ஓய்வுக்குப் பின்னர் யுவராஜ் முதல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறார்
  • கனடாவில் நடக்கும் க்ளோபல் டி20 கனடா 2019 தொடரில் பங்கேற்றுள்ளார் யுவராஜ்
  • அவர், டொரான்டோ நேஷ்னல்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுகிறார்
தொடர்புடைய கட்டுரைகள்
ஓய்வுக்கு பின் விர்சுவல் ரியாலிட்டி கேமில் அதிக நேரம் செலுத்தும் யுவராஜ் சிங்!
ஓய்வுக்கு பின் விர்சுவல் ரியாலிட்டி கேமில் அதிக நேரம் செலுத்தும் யுவராஜ் சிங்!
"தேர்வுக்குழுவினரிடம் இதை கேளுங்கள்" - தோனி எதிர்காலம் குறித்து யுவராஜ் சிங்!
"தேர்வுக்குழுவினரிடம் இதை கேளுங்கள்" - தோனி எதிர்காலம் குறித்து யுவராஜ் சிங்!
"பும்ரா எங்கே?" என்ற ரசிகரின் கேள்விக்கு மும்பை இந்தியன்ஸின் பதில்!
"பும்ரா எங்கே?" என்ற ரசிகரின் கேள்விக்கு மும்பை இந்தியன்ஸின் பதில்!
“My Super Star”- யுவராஜுக்கு Ganguly கொடுத்த அல்டிமேட் ரிப்ளை!
“My Super Star”- யுவராஜுக்கு Ganguly கொடுத்த அல்டிமேட் ரிப்ளை!
பன்ட்டை ஆதரித்த யுவராஜ் சிங்... அவருக்கு பதிலளித்த ஆஸி. வீரர் டீன் ஜோன்ஸ்
பன்ட்டை ஆதரித்த யுவராஜ் சிங்... அவருக்கு பதிலளித்த ஆஸி. வீரர் டீன் ஜோன்ஸ்
Advertisement