ஐபிஎல் ஏலம் 2019: ஒரு கோடிக்கு சரிந்த யுவராஜ் சிங்கின் அடிப்படை விலை!

Updated: 07 December 2018 14:42 IST

இந்தியன் பிரீமியர் லீக் 2019ம் ஆண்டு சீஸனுக்கான ஏலம் வரும் டிசம்பர் 18ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது.

Indian Premier League 2019 Auction: Yuvraj Singh
2018ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின் யுவராஜ் சிங்கின் அடிப்படை விலை 1 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. © File Photo/BCCI

இந்தியன் பிரீமியர் லீக் 2019ம் ஆண்டு சீஸனுக்கான ஏலம் வரும் டிசம்பர் 18ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது. சில முக்கியமான வீரர்களின் ஏல விவரம் வெளியாகியுள்ளது. கிரிகின்ஃபோ தளத்தில் வெளியாகியுள்ள செய்தியில், ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்கள் மேக்ஸ்வெல் மற்றும் பின்ச் ஆகியோர் ஏலத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். உலகக் கோப்பைக்கு முன்பான ஆஸ்திரேலியாவின் பயிற்சிக்கு வீரர்கள் தயாராக வேண்டும் என்பதால் அவர்களை ஏலத்தில் எடுக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய வீரர்களில் 2018ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின் யுவராஜ் சிங்கின் அடிப்படை விலை 1 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றும் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள இந்திய வீரர்கள் சஹா, அக்சர் பட்டேல் மற்றும் ஷமி ஆகியோரது அடிப்படை விலையும் ஒரு கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

போன சீஸனில் அதிக விலையான 11.5 கோடிக்கு ஏலம் போன உனக்டட், இந்த முறை 1.5 கோடி என்ற‌ அடிப்படை விலையில் நிர்ணயிக்கப்பட்டார். வெளிநாட்டு வீரர்கள் சாம் குரான், கோரி ஆன்டர்சன், மலிங்கா, ஷான் மார்ஷ், மேத்யூஸ், மெக்குலம் மற்றும் வோக்ஸ் ஆகியோர் 2 கோடி அடிப்படை விலையில் நிர்ணயிக்கப்பட்டனர். 

கடந்த புதனுக்கு முன்பாக பிசிசிஐ ஏலத்துக்கு 1000க்கும் அதிகமான பதிவுகளை பெற்றது. அதன் பின் தெரிவித்துள்ள தகவலில், இந்த முறை ஏலத்தில் 1003 வீரர்கள் பங்கு பெறுவார்கள் அவர்களில் 232 பேர் வெளிநாட்டு வீரர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 70 வீரர்கள் 145.25 கோடி செலவில் ஏலம் எடுக்கப்படவுள்ளனர்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
காயத்திலிருந்து மீண்டு
காயத்திலிருந்து மீண்டு 'பாட்டில் கேப் சேலஞ்ச்' செய்த ஷிகர் தவான்!
"ஐசிசி விதிகள் கேலிக்குரியது" - நியூசிலாந்து தோல்விக்கு பின் கவுதம் கம்பீர்
"ஐசிசி விதிகள் கேலிக்குரியது" - நியூசிலாந்து தோல்விக்கு பின் கவுதம் கம்பீர்
ஏபி டி வில்லியர்ஸுக்கு ஆதரவு தெரிவித்த விராட் கோலி, யுவராஜ் சிங்!
ஏபி டி வில்லியர்ஸுக்கு ஆதரவு தெரிவித்த விராட் கோலி, யுவராஜ் சிங்!
பன்ட்டை விமர்சித்த கெவின் பீட்டர்சன்... பதிலளித்த யுவராஜ் சிங்!
பன்ட்டை விமர்சித்த கெவின் பீட்டர்சன்... பதிலளித்த யுவராஜ் சிங்!
சாதாரணமான #BottleCapChallenge இல்லை...இது யுவராஜ் சிங் ஸ்பெஷல்...!
சாதாரணமான #BottleCapChallenge இல்லை...இது யுவராஜ் சிங் ஸ்பெஷல்...!
Advertisement