சிக்ஸர் மன்னன் யுவராஜின் சிலிர்க்க வைக்கும் இன்னிங்ஸ்கள்!

Updated: 10 June 2019 17:41 IST

யுவராஜ் சிங் தனது 19 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றார்.

Yuvraj Singh: Career Highlights And Statistics
யுவராஜின் சில இன்னிங்ஸ்கள் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை. © AFP

யுவராஜ் சிங் தனது 19 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றார். இடது கை பேட்ஸ்மேன் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் 40 டெஸ்ட், 304 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். யுவராஜின் சில இன்னிங்ஸ்கள் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

யுவராஜ்ஜின் சில சுவாரஸ்யமான நிகழ்வுகள்:

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை:

இந்தியா 2000வது ஆண்டில் முதல் முறையாக 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றது. அவர் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அது தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்த்து தேசிய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

8 போட்டிகளில் 203 ரன்களையும், 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 68 ரன்களையும், 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்,

ஐசிசி சாம்பியன் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார்.

நாட்வெஸ்ட் கோப்பை 2002:

நாட்வெஸ்ட் கோப்பை இறுதிப்போட்டியில் கங்குலி தலைமையுலான இந்திய அணிக்கு 326 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதில் யுவராஜ் முக்கியமான இன்னிங்ஸை ஆடினார்.  

146/5 என்ற நிலையில் தடுமாறிய இந்திய அணியை 121 ரன் பார்ட்னர்ஷிப் மூலம் யுவராஜும், கைஃபும் காப்பாற்றி இலக்கை எட்ட வைத்து சாதனை வெற்றிக்கு வழிவகுத்தனர். யுவராஜ் 63 பந்தில் 69 ரன்கள் குவித்தனர்.

டி20 உலகக் கோப்பை 2007: 2007 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துடன் 16 பந்தில் 58 ரன்களையும், ஆஸ்திரேலியாவுடன் 30 பந்தில் 70 ரன்களையும் குவித்தார்,

ப்ராடின் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் குவித்து அசத்தினார். அதில் ஒரு சிக்ஸர் 119 மீட்டர் பறந்தது. 

உலகக் கோப்பை 2011: இந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். 9 போட்டிகளில் 362 ரன்களையும், 15 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.  இந்த தொடரில் ஒரு சதம் மற்றும் 4 அரைசதங்களை அடித்தார். இவரது ஆபார ஆட்டம் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா உலகக் கோப்பையை வெல்ல இதவியது. இந்த தொடரின் தொடர் நாயகனின் இவர்தான்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"மோசமான ஃபீல்டிங்" - மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணியை விமர்சித்த யுவராஜ் சிங்!
"மோசமான ஃபீல்டிங்" - மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணியை விமர்சித்த யுவராஜ் சிங்!
மேற்கிந்திய வீரரை பஞ்சாபி மொழியில் பேச வைத்த யுவராஜ் சிங்!
மேற்கிந்திய வீரரை பஞ்சாபி மொழியில் பேச வைத்த யுவராஜ் சிங்!
ஓய்வுக்கு பின் விர்சுவல் ரியாலிட்டி கேமில் அதிக நேரம் செலுத்தும் யுவராஜ் சிங்!
ஓய்வுக்கு பின் விர்சுவல் ரியாலிட்டி கேமில் அதிக நேரம் செலுத்தும் யுவராஜ் சிங்!
"தேர்வுக்குழுவினரிடம் இதை கேளுங்கள்" - தோனி எதிர்காலம் குறித்து யுவராஜ் சிங்!
"தேர்வுக்குழுவினரிடம் இதை கேளுங்கள்" - தோனி எதிர்காலம் குறித்து யுவராஜ் சிங்!
"பும்ரா எங்கே?" என்ற ரசிகரின் கேள்விக்கு மும்பை இந்தியன்ஸின் பதில்!
"பும்ரா எங்கே?" என்ற ரசிகரின் கேள்விக்கு மும்பை இந்தியன்ஸின் பதில்!
Advertisement