"ஃபிட்னஸ் சிலை" - கோலி மற்றும் பும்ராவை புகழ்ந்த யுவராஜ் சிங்!

Updated: 22 August 2019 14:11 IST

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணியினருடன் விராட் கோலி ஆண்டிகுவாவில் உள்ள ஜாலி பீச்சில் நேரம் கழித்தார்.

Yuvraj Singh Amazed As Virat Kohli, Jasprit Bumrah Flaunt Six-Pack Abs
ஐசிசி டெஸ்ட் அணிகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. © AFP

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணியினருடன் விராட் கோலி ஆண்டிகுவாவில் உள்ள ஜாலி பீச்சில் நேரம் கழித்தார். இதில், விராட் கோலி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இருவரும் தங்களின் சிக்ஸ் பேக்ஸ் தெரியும் படி போட்டோ எடுத்து பதிவிட்டனர். ரசிகர்கள் பலர் அந்த புகைப்படத்தை பகிர்ந்தாலும், முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங், விராட் கோலி மற்றும் பும்ராவின் உடல் கட்டுப்பாட்டை புகழ்ந்துள்ளார். "@virat.kohli  மற்றும் அணியினருடன் சூரிய குளியல்," விராட் கோலியிடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பும்ரா பதிவிட்டார்.

Sun soaking with @virat.kohli and the team

A post shared by jasprit bumrah (@jaspritb1) on

அந்தப் பதிவில் யுவராஜ் சிங், " சிறந்த உடற்தகுதி சிலை" என்று பதிலளித்தார்.

1nfendl

ஐசிசி டெஸ்ட் அணிகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில், இந்திய அணி தங்களின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை மேற்கிந்திய தீவுகளுடன் ஆடவுள்ளது.

அதேசமயம், இலங்கை, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்கான டெஸ்ட் போட்டிகளை ஆடத் தொடங்கியது.

இலங்கை அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் இரண்டு டெஸ்ட் தொடர்களில் முதல் தொடரை நியூசிலாந்துடன் மோதி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று புள்ளப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வென்றதால், இரண்டாவது இடத்தில் உள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டி ட்ராவானது.

முதல் உலகக் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கௌ மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆடவுள்ளது. இரண்டு ஆண்டுகளில் 27 தொடர்களில் 71 போட்டிகள் நடக்கவுள்ளன.

மேற்கிந்திய தீவுகளுக்கு ஒரு மாதம் சுற்றுப்பயணம் சென்றிருக்கும் இந்திய அணி, டி20 போட்டிகளில் 3-0 என்றும், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்றும் வென்றுள்ளது. முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஐசிசி தரவரிசையில் கோலி நம்பர் 1, பும்ரா முதலிடத்தை தவறவிட்டார்!
ஐசிசி தரவரிசையில் கோலி நம்பர் 1, பும்ரா முதலிடத்தை தவறவிட்டார்!
“பந்துடன் அச்சுறுத்தலாக இருப்பார் பும்ரா” - கேன் வில்லியம்சன்
“பந்துடன் அச்சுறுத்தலாக இருப்பார் பும்ரா” - கேன் வில்லியம்சன்
டி20 தரவரிசை: அதிரடியான ஆட்டத்துக்கு பின் 2வது இடத்தைப் பிடித்த கே.எல்.ராகுல்!
டி20 தரவரிசை: அதிரடியான ஆட்டத்துக்கு பின் 2வது இடத்தைப் பிடித்த கே.எல்.ராகுல்!
"நாங்கள் தோனியை மிகவும் மிஸ் செய்கிறோம்" - வீடியோவில் உணர்ச்சிவசப்பட்ட சாஹல்!
"நாங்கள் தோனியை மிகவும் மிஸ் செய்கிறோம்" - வீடியோவில் உணர்ச்சிவசப்பட்ட சாஹல்!
2வது டி20 வெற்றிக்கு பிறகு விராட் கோலி குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்!
2வது டி20 வெற்றிக்கு பிறகு விராட் கோலி குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்!
Advertisement