அதிவேகமாக 200 டெஸ்ட் விக்கெட்: 82 வருட சாதனையை முறியடித்தார் யாஸிர் ஷா!

Updated: 07 December 2018 11:41 IST

32 வயதான யாஸிர் ஷா தனது 33வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தின் வில் சோமர்விலேவை எல்பிடபிள்யூ செய்து 200வது விக்கெட்டை எட்டினார்

Pakistan vs New Zealand: Yasir Shah Fastest To 200 Test Wickets, Breaks 82-Year Record
82 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த சாதனையை யாஸிர் ஷா முறியடித்துள்ளார். © AFP

உலகின் அதிவேகமாக 200 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமையை பாகிஸ்தான் வீரர் யாஸிர் ஷா நிகழ்த்தியுள்ளார். 82 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த இந்தச் சாதனையை யாஸிர் ஷா முறியடித்துள்ளார். அபுதுபாயில் நடைபெற்றுவரும் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்த சாதனையை நிகழ்த்தினார். 

இந்த தொடரில் யாஸிர் ஷா முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் டெஸ்ட்டை 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தும், இரண்டாவது டெஸ்ட்டை இன்னிங்ஸ் மற்றும் 16 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானும் வென்றன. 32 வயதான யாஸிர் ஷா தனது 33வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தின் வில் சோமர்விலேவை எல்பிடபிள்யூ செய்து 200வது விக்கெட்டை எட்டினார்.

இதன் மூலம் 1936ம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் க்ளாரி க்ரிம்மெட் 36வது டெஸ்ட்டில் செய்த சாதனையை யாஸிர் ஷா 33வது டெஸ்ட்டிலேயே முறியடித்தார். இரண்டாவது டெஸ்ட்டில் யாஸிர் ஷா 14 விக்கெட்டுகளை வீழ்த்தியது, பாகிஸ்தான் 1-1 என்று தொடரை சமன் செய்ய உதவியது. இந்தத் தொடரில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் யாஸிர் ஷா.

பாகிஸ்தான் அணியின் இரண்டாவது சிறந்த பந்துவீச்சாக இவர் வீழ்த்திய 14 விக்கெட்டுகள் அமைந்தது. 1982ம் ஆண்டு முன்னாள் பாகிஸ்தான் வீரரும், தற்போதைய பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான் கான் 116 ரன்களை விட்டுக்கொடுத்து 14 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக உள்ளது. தற்பொது யாஸிர் ஷா 184 16 ரன்களை விட்டுக்கொடுத்து 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

2004ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமான யாஸிர் ஷா. அறிமுக போட்டியிலேயே 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  பின்னர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து என அடுத்தடுத்த தொடர்களில் ஜொலித்தார் யாஸிர் ஷா.

50 விக்கெட்டுகளை 9 போட்டிகளிலும், 100 விக்கெட்டுகளை 17 போட்டிகளிலும் வீழ்த்தினார் யாஸிர் ஷா. 

(With AFP inputs)

Comments
Advertisement