Listen to the latest songs, only on JioSaavn.com
 

"என்னால் பல நாட்கள் தூங்க முடியவில்லை" - திகார் நாட்கள் குறித்து ஶ்ரீசாந்த்!

Updated: 30 September 2019 14:58 IST

ஶ்ரீசாந்த் பல நாட்கள் சிறையில் தூங்கவில்லை என்று கூறினார். காரணம், அங்கு எரியும் விளக்கு எப்போதும் அணைப்படாது.

S Sreesanth Opens Up About His Time In Tihar Jail
இந்திய அணிக்காக ஶ்ரீசாந்த் 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். © AFP

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2013ன் போது ஸ்பாட் பிக்ஸிங்கில் பங்கு வகித்ததற்காக எஸ்.ஸ்ரீசாந்தின் ஆயுள் தடை உச்சநீதிமன்றத்தால் ஏழு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது, இது செப்டம்பர் 2020 இல் முடிவடைகிறது. 2013ம் ஆண்டு ஒரு மாதம் முழுக்க ஶ்ரீசாந்த் திகார் சிறையில் இருந்தார். அவருடன் ராஜஸ்தான் அணி வீரர்களான அஜித் சந்திலா மற்றும் அங்கீத் ஷவான் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுப்பட்டதற்காக இருந்தனர். சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு கொடுத்த நேர்காணலில் ஶ்ரீசாந்த் திகார் சிறையில் எப்படி நடத்தப்பட்டார் என்பதை குறித்து கூறியுள்ளார்.

"அங்கு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்த ஒருவர் இருந்தார். அவர் என்னை மிகவும் தவறாக நடத்துவார். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் தவறாக இருக்கும். எனக்கு அவரை பார்த்தால் பயமாக இருக்கும். நான் இதுகுறித்து ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நான் அவருடன் பேசத் தொடங்கினேன். அவர் சில நாட்களுக்கு பிறகு, 'நீ ரொம்ப பயப்படுகிறாய். என்னுடன் இரு. நிறைய பேர் உன்னை குறி வைக்கிறார்கள்' என்றார்" என்று ஶ்ரீசாந்த் இந்தியன் எக்ஸ்பிரஸில் கூறினார்.

இந்திய அணிக்காக ஶ்ரீசாந்த் 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் பல நாட்கள் சிறையில் தூங்கவில்லை என்று கூறினார். காரணம், அங்கு எரியும் விளக்கு எப்போதும் அணைப்படாது.

"நான் எந்த காரணமும் இல்லாமல் உடைந்து போவேன். நான் 6-7 வாரங்களுக்கு வலிப்புத்தாக்கங்களைப் பெறுவேன். திகாரின் என்னால் தூங்க முடியாது, அங்கு எரியும் விளக்கு எப்போதும் அணைக்கப்படாது," என்றார்.

36 வயதான ஶ்ரீசாந்த் 27 டெஸ்ட் போட்டிகள், 53 ஒரு ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 சர்வதேச டி20 போட்டிகளில் இடம்பெற்றுள்ளார். மொத்தமாக அவர் 169 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இந்தியாவுக்காக அவர் கடைசியாக 2011ம் ஆண்டு விளையாடினார்.

Comments
ஹைலைட்ஸ்
  • ஶ்ரீசாந்த், தான் உடைந்து போன நாட்கள் உண்டு என்று கூறினார்
  • 36 வயதான இவர் 27 டெஸ்ட் மற்றும் 53 ஒருநாள் போட்டிகள் ஆடியுள்ளார்
  • அவர் கடைசியாக 2011ம் ஆண்டு விளையாடினார்
தொடர்புடைய கட்டுரைகள்
"என்னால் பல நாட்கள் தூங்க முடியவில்லை" - திகார் நாட்கள் குறித்து ஶ்ரீசாந்த்!
"என்னால் பல நாட்கள் தூங்க முடியவில்லை" - திகார் நாட்கள் குறித்து ஶ்ரீசாந்த்!
2007 ஐசிசி டி20 உலகக் கோப்பை: தோனி தலைமையிலான இந்திய அணி வென்ற நாள் இன்று!
2007 ஐசிசி டி20 உலகக் கோப்பை: தோனி தலைமையிலான இந்திய அணி வென்ற நாள் இன்று!
கிரிக்கெட் வீரர் ஶ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து... காயமின்றி தப்பிய குடும்பத்தினர்!
கிரிக்கெட் வீரர் ஶ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து... காயமின்றி தப்பிய குடும்பத்தினர்!
பயஸ் ஆடும்போது என்னாலும் முடியும், அணிக்கு திரும்புவேன் ஸ்ரீஷாந்த் நம்பிக்கை
''பயஸ் ஆடும்போது என்னாலும் முடியும், அணிக்கு திரும்புவேன்'' ஸ்ரீஷாந்த் நம்பிக்கை
ஸ்ரீஷாந்த் மீதான ஆயுள் தடையை நீக்கி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்!
ஸ்ரீஷாந்த் மீதான ஆயுள் தடையை நீக்கி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்!
Advertisement