Listen to the latest songs, only on JioSaavn.com
 

“இந்தியா-பாகிஸ்தான் போட்டி இல்லாமல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடப்பதில் அர்த்தமில்லை” - வாக்கர் யூனிஸ்

Updated: 18 March 2020 13:06 IST

ஐசிசி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் இந்தியா மற்றும் பாகிஸ்தானை ஒரு டெஸ்ட் தொடரில் விளையாடுவதில் மிகவும் செயலில் பங்கு வகிக்க வேண்டும் என்றார் வாக்கர் யூனிஸ்.

World Test Championship Without India-Pakistan Series "Makes No Sense", Says Waqar Younis
இந்த சாம்பியன்ஷிப்பில் ஐசிசி இன்னும் செயலில் பங்கு வகிக்க வேண்டும் என்று வகார் யூனிஸ் கூறினார். © AFP

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் வாக்கர் யூனிஸ், உலக கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் இந்தியா மற்றும் பாகிஸ்தானை ஒரு டெஸ்ட் தொடரில் விளையாடுவதில் மிகவும் செயலில் பங்கு வகிக்க வேண்டும் என்றார். “பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் அரசாங்க மட்டத்தில் கூட இது ஒரு கடினமான சூழ்நிலை என்று எனக்குத் தெரியும், ஆனால் இந்த சாம்பியன்ஷிப்பில் ஐசிசி இன்னும் செயலில் பங்கு வகிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்று வாக்கர் யூடியூப் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

சாம்பியன்ஷிப்பின் விதிகளின்படி, ஒவ்வொரு அணியும் எட்டு அணிகளில் ஆறு போட்டிகளில் மட்டுமே விளையாடத் திட்டமிடப்பட்டுள்ளது, இது கிட்டத்தட்ட இரண்டு வருட கால போட்டியில் இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் எதிர்கொள்ளாமல் இருக்க உதவுகிறது. 

சாம்பியன்ஷிப் ஆகஸ்ட் 1, 2019ம் ஆண்டு தொடங்கியது மற்றும் இறுதிப் போட்டி ஜூன் 10 முதல் 14, 2021ம் ஆண்டு வரை லார்ட்ஸில் நடைபெற உள்ளது.

“ஐசிசி தலையிட்டு ஏதாவது செய்திருக்க வேண்டும், ஏனென்றால் என்னைப் பொறுத்தவரைப் பாகிஸ்தான் மற்றும் இந்தியா டெஸ்ட் போட்டிகள் இல்லாமல் ஒரு டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடப்பதில் எந்த அர்த்தமுமில்லை" என்று வக்கார் கூறினார்.

2007 முதல் இரு நாடுகளும் இருதரப்பு டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை. இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் என்பதை, அவர் ஒருபோதும் மறக்க முடியாத ஒன்று என்று வகார் கூறினார். “இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நான் அறிமுகமானேன் என்பதை என்னால், எப்போதும் மறக்க முடியாது,” என்றார் அவர்.

Comments
ஹைலைட்ஸ்
  • ஐ.சி.சி இன்னும் செயலில் பங்கு வகிக்க வேண்டும் என்று வாக்கர் கூறினார்
  • ஒவ்வொரு அணியும் 8 அணிகளில் 6 அணிகளை மட்டுமே விளையாட திட்டமிடப்பட்டுள்ளது
  • இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு தொடர்களை விளையாடுவதில்லை
தொடர்புடைய கட்டுரைகள்
“நானும் விராட் கோலியும் நண்பர்களாக இருந்திருப்போம்” - சோயிப் அக்தர்!
“நானும் விராட் கோலியும் நண்பர்களாக இருந்திருப்போம்” - சோயிப் அக்தர்!
“ரசிகர்கள் இல்லாமல் கிரிக்கெட் போட்டிகள் நடத்துக் கூடாது” - வக்கார் யூனிஸ்!
“ரசிகர்கள் இல்லாமல் கிரிக்கெட் போட்டிகள் நடத்துக் கூடாது” - வக்கார் யூனிஸ்!
“இந்தியா-பாகிஸ்தான் போட்டி இல்லாமல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடப்பதில் அர்த்தமில்லை” - வாக்கர் யூனிஸ்
“இந்தியா-பாகிஸ்தான் போட்டி இல்லாமல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடப்பதில் அர்த்தமில்லை” - வாக்கர் யூனிஸ்
மிஸ்பா கோச், வாக்கர் பந்துவீச்சு கோச் - பாகிஸ்தான் வாரியம் அதிரடி
மிஸ்பா கோச், வாக்கர் பந்துவீச்சு கோச் - பாகிஸ்தான் வாரியம் அதிரடி
"2003 உலகக் கோப்பையில் தோற்க வாக்கார் யூனிஸ்தான் காரணம்" - சோயிப்அக்தர்
"2003 உலகக் கோப்பையில் தோற்க வாக்கார் யூனிஸ்தான் காரணம்" - சோயிப்அக்தர்
Advertisement