"4 ஆண்டுக்கு ஒரு முறைதான் உலகக் கோப்பை... ஆண்டுதோறும் ஐபிஎல்" - கேப்டன் கோலி அறிவுரை

Updated: 15 March 2019 17:15 IST

ஐபிஎல் மார்ச் 23ம் தேதியும், உலகக் கோப்பை மே 30ம் தேதியும் துவங்குகிறது.

Virat Kohli Asks Players To Be Smart In IPL 2019 Before World Cup
உலகக் கோப்பை தொடருக்கு தயாராக உள்ள வீரர்கள் தங்கள் வேலைபளுவை கவனத்தில் கொள்ள வேண்டும். அது அவர்களது பொறுப்பு - கோலி © AFP

உலகக் கோப்பைக்கு முன் இந்தியா ஆடிய ஆஸ்திரேலிய தொடரை இந்திய அணி கைப்பற்ற தவறியது. இந்த தொடருக்கு பிறகு இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் பிஸியாகி விடுவார்கள். ஐபிஎல் தொடருக்கு முன் இந்திய கேப்டன் கோலி, "உலகக் கோப்பை தொடருக்கு தயாராக உள்ள வீரர்கள் தங்கள் வேலைபளுவை கவனத்தில் கொள்ள வேண்டும். அது அவர்களது பொறுப்பு" என்று கூறியுள்ளார். 

"பல வீரர்களை லீக் தொடரிலிருந்து இந்திய அணிக்கு விடுவிப்பதில் அணி நிர்வாகம் கவனமாக உள்ளது. இது ஐபிஎல் தொடரில் முழு பங்களிப்பை அளிக்க வேண்டாம் என்ற அர்த்தத்தில் அல்ல. ஆனால் தொடரில் சாதூர்யமாக ஆடவேண்டும் என்பது பற்றிய விஷயம்" என்றார்.

"அனைத்து வீரர்களும் கண்காணிக்கப்படுவார்கள். அவர்களுக்கு போதிய ஓய்வு தேவை. ஐபிஎல் எல்லா ஆண்டும் நடக்கும். உலகக் கோப்பை அப்படியல்ல. ஐபிஎல் ஆடவேண்டாம் என்பது என் நோக்கமல்ல... ஐபிஎல் காரணமாக உலகக் கோப்பையை தவறவிடக்கூடாது என்பது தான்" என்று கோலி கூறியுள்ளார்.

2015லிருந்து முதல் முறையாக இந்திய அணி சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்துள்ளது. அதுவும் உலகக் கோப்பைக்கு முன்பாக இழந்துள்ளது.  இது அணியை எந்த விதத்திலும் பாதிக்காது என்று கோலி கூறியுள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை தோற்றது இந்தியா
  • அடுத்ததாக, ஐபிஎல் போட்டிகளில் வீரர்கள் தங்களின் கவனத்தை செலுத்துவார்கள்
  • உலகக் கோப்பையில் பங்கேற்கும் வீரர்கள் ஐபிஎல்லில் கண்காணிக்கப்படுவார்கள்
தொடர்புடைய கட்டுரைகள்
இணையத்தில் வைரலான கைஃப்போடு கைஃப் எடுத்த புகைப்படம்
இணையத்தில் வைரலான கைஃப்போடு கைஃப் எடுத்த புகைப்படம்
"அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி" - வாட்சனின் இன்ஸ்டாகிராம் பதிவு!
"அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி" - வாட்சனின் இன்ஸ்டாகிராம் பதிவு!
"என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள ஐபிஎல் உதவியது" - ஜானி பாரிஸ்ட்டோ
"என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள ஐபிஎல் உதவியது" - ஜானி பாரிஸ்ட்டோ
ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
'' தோனி தவறாக முடிவெடுப்பார். ஆனால், அவரிடம் சொல்ல முடியாது'' சர்ச்சையை ஏற்படுத்தும் குல்தீப் கருத்து!!
Advertisement