உலகக்கோப்பையில் 4-வது சதம்! புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா!!

Updated: 02 July 2019 17:46 IST

சர்வதேச அளவில் குமார் சங்ககரா உலகக்கோப்பை தொடரில் அதிக சதங்களை அடித்துள்ளார். அவரது சாதனையை ரோஹித் சமன் செய்திருக்கிறார்.

India vs Bangladesh: Rohit Sharma Scores 4th Century In One World Cup, Most By Any Indian Batsman
வங்கதேசத்திற்கு எதிராக அதிரடி சதத்தை அடித்துள்ளார் ரோஹித் © AFP

உலகக்கோப்பை தொடரில் வங்க தேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மா சதம் அடித்துள்ளார். இந்த தொடரில் அவர் அடிக்கும் 4-வது சதம் இதுவாகும். இதன் மூலம் புதிய சாதனையை ரோஹித் சர்மா நிகழ்த்தியுள்ளார். 

முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, 2003-ல் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின்போது 3 சதங்களை அடித்தார். இதுதான் இந்தியர் ஒருவர் உலகக்கோப்பை தொடரில் அடித்த அதிக சதமாக இருந்து வந்தது. அந்த  சாதனையை ரோஹித் சர்மா தற்போது முறியடித்துள்ளார். 

முன்னதாக இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக ரோஹித் சதம் அடித்திருந்தார். சர்வதேச அளவில் 2015 உலகக்கோப்பை தொடரின்போது இலங்கை அணியின் குமார் சங்ககரா 4 சதங்கள் விளாசி இருந்தார். இதுதான் உலக சாதனையாக இருந்து வருகிறது. இதனையும் ரோஹித் சமன் செய்திருக்கிறார். 

சனிக்கிழமை நடைபெறும்  அடுத்த ஆட்டத்தில் இந்தியா இலங்கை அணியை எதிர்கொள்கிறது. அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெறும்போது அடுத்ததாக 2 ஆட்டங்கள் கிடைக்கும். இதனால் மேலும் ஒரு சதம் விளாசி உலக சாதனையை ரோஹித் சர்மா படைப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

Comments
ஹைலைட்ஸ்
  • உலக அளவில் சங்ககராவின் சாதனையை சமன் செய்துள்ளார் ரோஹித்
  • ரோஹித் சர்மா சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்துள்ளார்
  • இந்தப் போட்டியில் வென்றால் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறும்
தொடர்புடைய கட்டுரைகள்
தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்த தவானின் வீடியோவை வெளியிட்ட ரோஹித் ஷர்மா!
தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்த தவானின் வீடியோவை வெளியிட்ட ரோஹித் ஷர்மா!
"ரோஹித், ஜடேஜா இருவரும் பொறுப்பான, அன்பான அப்பாக்கள்" - ஷிகர் தவான்!
"ரோஹித், ஜடேஜா இருவரும் பொறுப்பான, அன்பான அப்பாக்கள்" - ஷிகர் தவான்!
Virat Kohli: டி20களிலும் சாதனை நாயகனாக உருவெடுத்த
Virat Kohli: டி20களிலும் சாதனை நாயகனாக உருவெடுத்த 'கிங்' கோலி
டெஸ்ட் தொடரில் இணைந்த சுப்மன் கில்லுக்கு வாழ்த்து தெரிவித்த அஸ்வின்!
டெஸ்ட் தொடரில் இணைந்த சுப்மன் கில்லுக்கு வாழ்த்து தெரிவித்த அஸ்வின்!
"ரோஹித் ஷர்மா உலகத் தரம் வாய்ந்த வீரர்" - புகழும் ஆடம் கில்கிறிஸ்ட்!
"ரோஹித் ஷர்மா உலகத் தரம் வாய்ந்த வீரர்" - புகழும் ஆடம் கில்கிறிஸ்ட்!
Advertisement