"பாகிஸ்தானுடன் ஆடுவதா வேண்டாமா?"... இன்று கூடுகிறது பிசிசிஐ நிர்வாகக்குழு!

Updated: 22 February 2019 11:44 IST

இன்று நடக்கும் கூடத்தில் நிர்வாகக்கூழுவை சேர்ந்த எதுல்ஜி மற்றும் வினோத் ராய் கலந்து கொள்கிறார்கள். இந்தக் குழு மீண்டும் பிப்ரவரி 27 முதல் மார்ச் 2 வரை சந்தித்து முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது.

CoA Meet On Friday To Discuss Playing Pakistan In World Cup
உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் ஆடுவதா வேண்டாமா என்பது பற்றிய முக்கிய முடிவை எடுப்பதற்காக பிசிசிஐ நிர்வாக குழு கூடுகிறது. © AFP

2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் ஆடுவதா வேண்டாமா என்பது பற்றிய முக்கிய முடிவை எடுப்பதற்காக இன்று உச்ச நீதி மன்றத்தால் அமைக்கப்பட்ட பிசிசிஐ நிர்வாக குழு கூடி முடிவெடுக்கவுள்ளது. புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 40 மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கு பாகிஸ்தானுடன் உலகக் கோப்பையில் ஆடக்கூடாது என்று இந்திய முன்னாள் வீரர்கள் கவாஸ்கர், கங்குலி, சேத்தன் சவ்கான், ஹர்பஜன் ஆகியோர் கூறியுள்ளனர். 

பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோஹ்ரி ஐசிசிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "பாகிஸ்தானை உலகக் கோப்பையிலிருந்து தடை செய்யுமாறு கோரியுள்ளார். ஆனால், மற்ற அணிகள் இந்தியாவின் முடிவை ஏற்குமா என்பது தெரியவில்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஐசிசியின் செல்வாக்குமிக்க வாரியமாக இந்தியா உள்ளது. இதனால் ஐசிசி இந்த முடிவை ஏற்றாலும் ஏப்ரல் மாதம் நடக்கும் பொதுக்கூட்டத்தில் இந்தியா சிக்கலை சந்திக்கும் என்று கூறப்படுகிறது. 

இதனால் இந்தியா 2021 சாம்பியன் ட்ராபி மற்றும் 2023 உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பு பறிபோகலாம் என்று கூறப்படுகிறது. 

இன்று நடக்கும் கூடத்தில் நிர்வாகக்கூழுவை சேர்ந்த எதுல்ஜி மற்றும் வினோத் ராய் கலந்து கொள்கிறார்கள். இந்தக் குழு மீண்டும் பிப்ரவரி 27 முதல் மார்ச் 2 வரை சந்தித்து முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • பாகிஸ்தானுடன் ஆடுவது குறித்தான முடிவு எடுக்க இன்று குழு கூடுகிறது
  • இந்தக் கூட்டத்தில் எதுல்ஜி மற்றும் வினோத் ராய் கலந்து கொள்கிறார்கள்
  • மற்ற அணிகள் இந்தியாவின் முடிவை ஏற்குமா என்பது தெரியவில்லை
தொடர்புடைய கட்டுரைகள்
India vs Bangladesh Test:
India vs Bangladesh Test: 'பிங்க்' பால் டெஸ்ட் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை!
காயம் காரணமாக பங்களாதேஷ் வீரர் 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கம்!
காயம் காரணமாக பங்களாதேஷ் வீரர் 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கம்!
முதல் பகல்-இரவு டெஸ்ட்டை முன்னிட்டு
முதல் பகல்-இரவு டெஸ்ட்டை முன்னிட்டு 'பிங்க்' நிறத்துக்கு மாறிய ஈடன் கார்டன்ஸ்!
இந்திய அணி வீரர்கள் பகல்-இரவு டெஸ்ட்டில் ஆட கொல்கத்தா வந்தனர்!
இந்திய அணி வீரர்கள் பகல்-இரவு டெஸ்ட்டில் ஆட கொல்கத்தா வந்தனர்!
"Man Of The Watch Award" - அஸ்வினுக்கு நெட்ஃபிலிக்ஸ் வழங்கிய விருது!
"Man Of The Watch Award" - அஸ்வினுக்கு நெட்ஃபிலிக்ஸ் வழங்கிய விருது!
Advertisement