இந்தியாவிடம் கிரிக்கெட்டுக்காக கெஞ்ச வேண்டாம் : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்

Updated: 15 June 2019 10:09 IST

2013ம் ஆண்டிலிருந்து இந்தியா பாகிஸ்தான் இடையே போட்டி தொடர்கள் நடக்கவில்லை. ஆனால் ஐசிசி தொடர்களில் மட்டும் இரு அணிகளும் இணைந்து ஆடி வருகின்றன.

Won
இந்தியா பாகிஸ்தான் போட்டி ஜூன் 16 மான்செஸ்டரில் நடக்கவுள்ளது. © AFP

2019 உலகக் கோப்பையின் முக்கியமான போட்டியாக பார்க்கப்படும் இந்தியா பாகிஸ்தான் போட்டி ஜூன் 16 மான்செஸ்டரில் நடக்கவுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இஸான் மணி இந்தியாவிடன் இருநாடுகள் தொடருக்காக கெஞ்ச வேண்டாம் என்று கூறியுள்ளார். இந்தியாவுடன் கிரிக்கெட் ஆடவே விரும்புகிறோம். அதற்காக அவர்களிடமோ மற்ற நாடுகளிடமோ கெஞ்சக்கூடாது. கெளரவமான முறையில் போட்டி தொடர் அமைய வேண்டும் என்றார்.

2013ம் ஆண்டிலிருந்து இந்தியா பாகிஸ்தான் இடையே போட்டி தொடர்கள் நடக்கவில்லை. ஆனால் ஐசிசி தொடர்களில் மட்டும் இரு அணிகளும் இணைந்து ஆடி வருகின்றன.

இந்த வருட நவம்பரில் ஐசிசி பெண்கள் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவில் பாகிஸ்தான் ஆடவுள்ளது. அதன்பின் இருநாடுகளுக்கிடையே கிரிக்கெட் நடைபெற வாய்ப்புள்ளது என்றார்,

இலங்கை, நவம்பரில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகளில் ஆடவுள்ளது. 

2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இலங்கை அணி ஆடவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அணிகள் பாகிஸ்தானில் வந்து ஆடுவதற்கும், தங்குவதற்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைசெய்து வருவதாகவும், இது வருங்காலத்தில் போட்டிகளை அதிகறிக்கும் என்றும் மணி கூறினார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"பல பெண்களுடன் தொடர்பு" : பிசிபியிடம் மன்னிப்பு கேட்ட இமாம் உல் அக்!
"பல பெண்களுடன் தொடர்பு" : பிசிபியிடம் மன்னிப்பு கேட்ட இமாம் உல் அக்!
ஐசிசியின் முக்கிய கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் இஷான் மணி!
ஐசிசியின் முக்கிய கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் இஷான் மணி!
“கறார் நடவடிக்கை!”- வீரர்களை எச்சரிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
“கறார் நடவடிக்கை!”- வீரர்களை எச்சரிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
'நல்லா விளையாடுங்க... நாங்க இருக்கிறோம்' - பாக். கேப்டனை தேற்றிய கிரிக்கெட் வாரிய தலைவர்!!
இந்தியாவிடம் கிரிக்கெட்டுக்காக கெஞ்ச வேண்டாம் : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்
இந்தியாவிடம் கிரிக்கெட்டுக்காக கெஞ்ச வேண்டாம் : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்
Advertisement