மே 6ல் துவங்குகிறது பெண்கள் டி20 லீக் தொடர்!

Updated: 24 April 2019 18:26 IST

இந்தியாவில் பெண்கள் டி20 சேலஞ்ச் நான்கு போட்டிகள் கொண்ட தொடர் மே 6ம் தேதி துவங்கவுள்ளது. இதில் மூன்று அணிகள் கலந்துகொள்ளவுள்ளன.

Women
இந்திய டி20 கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் துணைகேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகிய இருவரும் முறையே சூப்பர் நோவாஸ் மற்றும்  ட்ரையல் ப்ளாஸர்ஸ் அணியை வழிநடத்தினர். © BCCI

இந்தியாவில் பெண்கள் டி20 சேலஞ்ச் நான்கு போட்டிகள் கொண்ட தொடர் மே 6ம் தேதி துவங்கவுள்ளது. இதில் மூன்று அணிகள் கலந்துகொள்ளவுள்ளன. சூப்பர் நோவாஸ், ட்ரையல் ப்ளாஸர்ஸ் மற்றும் வெலாசிட்டி என அணிகளுக்கு பயர் சூட்டப்பட்டுள்ளது. "ஐபிஎல்லை போன்றே இந்தியா, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீராங்கனைகளை கொண்டு இது நடத்தப்படவுள்ளது" என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. 

இந்த போட்டிகள் ஐபிஎல் ப்ளே ஆஃப் சமயத்தில் ஜெய்ப்பூரில் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது. கடந்த வருடம் மும்பையில் ஒரே ஒரு போட்டி சூப்பர் நோவா மற்றும் ட்ரையல் ப்ளாசர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் இந்திய டி20 கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் துணைகேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகிய இருவரும் முறையே சூப்பர் நோவாஸ் மற்றும்  ட்ரையல் ப்ளாஸர்ஸ் அணியை வழிநடத்தினர்.

சூப்பர் நோவாஸ் இந்த போட்டியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் நியூசிலாந்தின் சூஸி பேட்ஸ் சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆஸ்திரேலியாவின் மெக் லானிங், எல்லீஸ் பெர்ரி மற்றும் அலீசா, இங்கிலாந்தின் டேனியல் வாட் ,மற்றும் டேனியல் ஹசல் மற்றும் நியூசிலாந்துன் டிவைன் மற்றும் தாஹூ ஆகியோர் இந்த வருட தொடரில் பங்கேற்கவுள்ளனர்.

போட்டி அட்டவணை:

மே 6: சூப்பர் நோவாஸ் vs ட்ரையல் ப்ளாசர்ஸ்

மே 8: ட்ரையல் ப்ளாசர்ஸ் vs வெலாசிட்டி

மே 9: சூப்பர் நோவாஸ் vs வெலாசிட்டி

இதில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள் மே 11 நடக்கும் இறுதிப்போட்டியில் ஆடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
100 டி20 போட்டிகளில் இடம்பெற்ற முதல் இந்தியரானார் ஹர்மன்பிரீத் கவுர்!
100 டி20 போட்டிகளில் இடம்பெற்ற முதல் இந்தியரானார் ஹர்மன்பிரீத் கவுர்!
"கிரிக்கெட் ஆட சச்சின்தான் காரணம்" - பெண்கள் அணி வீராங்கனை ஷஃபாலி
"கிரிக்கெட் ஆட சச்சின்தான் காரணம்" - பெண்கள் அணி வீராங்கனை ஷஃபாலி
பெண்கள் டி20 சேலஞ்சுக்கு மிதாலி,மந்தனா, கவுர் கேப்டன்!
பெண்கள் டி20 சேலஞ்சுக்கு மிதாலி,மந்தனா, கவுர் கேப்டன்!
மே 6ல் துவங்குகிறது பெண்கள் டி20 லீக் தொடர்!
மே 6ல் துவங்குகிறது பெண்கள் டி20 லீக் தொடர்!
இங்கிலாந்து டி20 தொடர்: பெண்கள் அணிக்கு ஸ்மிருதி மந்தனா கேப்டன்!
இங்கிலாந்து டி20 தொடர்: பெண்கள் அணிக்கு ஸ்மிருதி மந்தனா கேப்டன்!
Advertisement