மகளிருக்கான இருபது ஓவரில், பாக்கிஸ்தான் அணியை வென்ற இந்திய அணி!

Updated: 09 June 2018 16:39 IST

5 போட்டிகளில் விளையாடி, 8 புள்ளிகள் உடன் இந்தியா முதல் இடத்தில் உள்ளது

Women
Smriti Mandhana and Harmanpreet Kaur added 65 runs for the 3rd wicket. © Twitter

மகளிருக்கான இருபது ஓவர் ஆசிய கோப்பையில் கடந்த சனிக்கிழமை அன்று கின்ராரா அகாடமி ஓவல், கோலாலம்பூரில் நடைப்பெற்ற போட்டியில், இந்திய மகளிர் அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மித்தாலி ராஜ் (0) மற்றும் தீப்து ஷர்மா (0), ஆகிய ஆட்டகாரர்களின் விக்கெட் சரிந்தாலும், மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஸ்மிரிதி மந்தான (38) மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் (34 விக்கெட் இழக்காமல்) 65 ரன்கள் குவித்தனர். 

5 போட்டிகளில் விளையாடி, 8 புள்ளிகள் உடன் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. 6 புள்ளிகளுடன் பாக்கிஸ்தான் இரண்டாம் இடத்தில் உள்ளது.

மூன்றாவது இடத்தில் இருக்கும் வங்கதேச அணிக்கும், மலேசியா அணிக்கும் நடைப்பெற இருக்கும் ஆட்டத்தின் முடிவை சார்ந்து இறுதி போட்டியில் இந்தியாவை சந்திக்கும் அணி எது என்பது முடிவாகும்.

இந்த போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றால், இறுதி போட்டியில் ஆடும் வாய்ப்பு கிடைக்கும். இல்லையெனில், அது இந்தியா - பாக்கிஸ்தான் மோதும் இறுதி போட்டியாக அமையும்.

முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி, 72/7 என்று ரன்கள் குவித்தது. சனா மிர் (20 ஆட்டம் இழக்காமல்),  நதியா கான் (18) ஆகிய இரண்டு வீரர்களே அதிகபட்ச இரண்டு இலக்க ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணியின் ஏக்தா பிஷ்ட்டின் அதிரடி பந்து வீச்சால் பாகிஸ்தான் அணி சுருண்டது. அதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி, அடுத்தடுத்து மித்தாலி ராஜ் மற்றும் தீப்து ஷர்மா ஆகியோர் ஆட்டம் இழந்ததால், 5/2 என்ற நிலையில் தடுமாறியது இந்திய அணி.

எனினும், அடுத்து களம் இறங்கிய இந்திய அணி, ஸ்மிரிதி மந்தான மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் அதிரடி ஆட்டத்தால், 23 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி பெற்றது.

Comments
ஹைலைட்ஸ்
  • ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேற்றம்
  • பாகிஸ்தான் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது
  • ஸ்மிரிதி மந்தான மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் அதிரடி ஆட்டம்
தொடர்புடைய கட்டுரைகள்
அர்ஜுனா விருதுக்கு பும்ரா, ஷமி, ஜடேஜா பெயர்கள் பரிந்துரை!
அர்ஜுனா விருதுக்கு பும்ரா, ஷமி, ஜடேஜா பெயர்கள் பரிந்துரை!
"அணிக்கு மிதாலியின் அனுபவம் தான் ப்ளஸ்" - கேப்டன் மந்தனா!
"அணிக்கு மிதாலியின் அனுபவம் தான் ப்ளஸ்" - கேப்டன் மந்தனா!
இங்கிலாந்து தொடர்: 2-1 என்று தொடரை கைப்பற்றியது இந்திய‌ பெண்கள் அணி
இங்கிலாந்து தொடர்: 2-1 என்று தொடரை கைப்பற்றியது இந்திய‌ பெண்கள் அணி
பெண்கள் கிரிக்கெட்: இங்கிலாந்தை வொயிட்வாஷ் செய்யுமா இந்தியா?
பெண்கள் கிரிக்கெட்: இங்கிலாந்தை வொயிட்வாஷ் செய்யுமா இந்தியா?
இங்கிலாந்து டி20 தொடர்: பெண்கள் அணிக்கு ஸ்மிருதி மந்தனா கேப்டன்!
இங்கிலாந்து டி20 தொடர்: பெண்கள் அணிக்கு ஸ்மிருதி மந்தனா கேப்டன்!
Advertisement