"தன் திறமையை வெளிகாட்ட ரிஷப் பன்ட்டுக்கு இதுவே சிறந்த வாய்ப்பு" - விராட் கோலி!

Updated: 03 August 2019 17:05 IST

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தோனி அணியில் இல்லாதது, ரிஷப் பன்ட் சர்வதேச போட்டிகளில் தன்னுடைய திறமையை வெளிக்காட்ட சிறந்த வாய்ப்பாக அமையும் என்றார்.

West Indies Tour Great Opportunity For Rishabh Pant To "Unleash Potential": Virat Kohli
தோனி இல்லாத இந்த நேரம் ரிஷ்ப் பன்ட்டுக்கு இந்திய அணியின் சீரான விளையாட்டு வீரராக மாறும் வாய்ப்பாக கிடைத்துள்ளது - கோலி © AFP

உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு இந்திய அணி முதல் போட்டியாக மேற்கிந்திய தீவுகளுடன் டி20 போட்டியில் ஆடவுள்ளது. இதன் முதல் டி20 இன்று நடக்கவுள்ளது. தோனி, ராணுவத்தில் பயிற்சி பெறுவதற்காக கிரிக்கெட்டிலிருந்து இரண்டு மாதங்கள் ஓய்வு பெற்றுள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தோனி அணியில் இல்லாதது, ரிஷப் பன்ட் சர்வதேச போட்டிகளில் தன்னுடைய திறமையை வெளிக்காட்ட சிறந்த வாய்ப்பாக அமையும் என்றார்.மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டி20 போட்டிக்கு முன்பு பேசிய விராட் கோலி, தோனி இல்லாத இந்த நேரம் ரிஷ்ப் பன்ட்டுக்கு இந்திய அணியின் சீரான விளையாட்டு வீரராக மாறும் வாய்ப்பாக கிடைத்துள்ளது என்றார்.

"ரிஷப் பன்ட் போன்றவர்களுக்கு சர்வதேச போட்டிகளில் ஆட இது சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. அவருடைய திறமையை கட்டவிழ்த்து விட இதுவே சிறப்பாக நேரம்," என்றார் விராட் கோலி.

"அவருக்கு எவ்வளவு திறமை உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். இந்திய அணிக்கு சீரான வீரராக அவர் ஆக வேண்டும். தோனியின் அனுபவம் அணிக்கு எப்போது தேவையான ஒன்று. ஆனால், ஏற்கெனவே சொன்னது போல ரிஷப் பன்ட் போன்ற இளைஞர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு. அதை அவர்கள் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்." என்றார்.

உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் வெளியேறிய பிறகு தோனி (38), ஓய்வு குறித்து பல செய்திகள் வெளியாகின. முன்னாள் வீரர்கள், மீடியா, ரசிகர்கள் என அவர் ஓய்வை குறித்து தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

முன்னாள் கேப்டன் தோனி ஓய்வு குறித்து எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. கோலிக்கு பலமுறை மறைமுகமாக தோனி அறிவுரை வழங்கி இந்திய அணியை வழிநடத்த உதவியுள்ளார்.

ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் ஆடவுள்ளது. ஆனால், குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டியில் இந்திய அணியின் ஃப்னிஷர்ஸ் யாரும் இடம்பெறவில்லை.

அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் உலக டி20யில் இடம்பெற போகும் வீரர்களுக்கு இந்த சுற்றுப்பயணம் உதவியாக இருக்கும் என்று விராட் கோலி கூறினார்.

"அணியின் சிறந்த பினிஷர்ஸ் இந்தச் சுற்றுப்பயணத்தில் இல்லை. பழகிய சில விஷயம் இல்லை. ஆனால், அணியில் இடம்பெற்றிருக்கும் வீரர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக இருக்கும்," என்றார்.

"உலகக் டி20 போட்டிகளில் ஆடபோவதை எதிர்நோக்கியுள்ளோம். வீரர்கள் அனைவருக்கும் சிறந்த நிலை ஏற்படும் என்று நினைக்கிறேன்." என்றார் விராட் கோலி.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ரிஷப் பன்ட்டை விமர்சித்தவர்களுக்கு பதிலளித்த விராட் கோலி!
ரிஷப் பன்ட்டை விமர்சித்தவர்களுக்கு பதிலளித்த விராட் கோலி!
சையத் முஷ்டாக் அலி டிராஃபியில் இணைந்தார் பன்ட்... இந்திய அணியில் கே.எஸ்.பரத்!
சையத் முஷ்டாக் அலி டிராஃபியில் இணைந்தார் பன்ட்... இந்திய அணியில் கே.எஸ்.பரத்!
"பன்ட்டை விட சிறப்பாக விளையாடுகிறீர்கள்" - இடது கை பேட்டிங் செய்த அஸ்வின்!
"பன்ட்டை விட சிறப்பாக விளையாடுகிறீர்கள்" - இடது கை பேட்டிங் செய்த அஸ்வின்!
"பன்ட்டுக்கு, ஸ்டம்புக்கு பின்னால் தெளிவும் நேர்த்தியும் தேவை" குமார் சங்கக்காரா
"பன்ட்டுக்கு, ஸ்டம்புக்கு பின்னால் தெளிவும் நேர்த்தியும் தேவை" குமார் சங்கக்காரா
ரிஷப் பன்ட்டின் விக்கெட் கீப்பிங்கை விமர்சித்து ரசிகர்கள் பதிவிட்ட மீம்ஸ்!
ரிஷப் பன்ட்டின் விக்கெட் கீப்பிங்கை விமர்சித்து ரசிகர்கள் பதிவிட்ட மீம்ஸ்!
Advertisement