உலகக் கோப்பையோடு ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெறுகிறார் அதிரடி வீரர் கிறிஸ் கெயில்!

Updated: 18 February 2019 12:18 IST

கிறிஸ் கெயில் 2019 ஐசிசி உலகக் கோப்பை போட்டி தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார்.

Chris Gayle To Retire From ODIs After 2019 Cricket World Cup
2019 ஐசிசி உலகக் கோப்பை போட்டி தொடருக்கு பிறகு கிறிஸ் கெயில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுகிறார். © AFP

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் 2019 ஐசிசி உலகக் கோப்பை போட்டி தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார். 39 வயதான கெயில் உலகக் கோப்பைக்கு முன்பாக இங்கிலாந்துடனான முதல் இரண்டு போட்டிகளில் ஆடவுள்ளார். கடந்த ஆண்டு  ஜூலையில் பங்களாதேஷுக்கு எதிராக ஆடியதற்கு பின் அவர் ஆடும் போட்டி இதுவாகும்.

கெயிலின் ஓய்வை மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் தெரிவித்துள்ளது. 

கெயில் தான் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிக சதமடித்த வீரர். அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் லாராவுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். 23 சதங்கள் அடித்துள்ள கெயில் 9727 ரன்களை குவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்காக தனிநபர் அதிகபட்ச ரன்களை குவித்ததும் கெயில் தான். 2015 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக 215 ரன்களை குவித்தார்.

சென்ற வருடம் சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற அப்ரிடியின் சாதனையை சமன் செய்தார். இருவரும் 476 சிக்சர்கள் அடித்துள்ளனர்.  இவர்களுக்கு அடுத்து மெக்குலம் 398 சிக்சர்கள் அடித்துள்ளார். கெயில் 443 போட்டிகளில் இந்த சாதனையை செய்தார். அப்ரிடியோ இதனை செய்ய 524 போட்டிகளை எடுத்துக் கொண்டார்.

டெஸ்ட்டில் 52, ஒருநாள் போட்டிகளில் 351, டி20யில் 73 சிக்சர்களை அடித்துள்ளார் அப்ரிதி. ஆனால் கெயிலோ டெஸ்ட்டில் 98, ஒருநாள் போட்டிகளில் 275, டி20யில் 103 சிக்சர்களை அடித்துள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் கிறிஸ் கெயில்
  • மேற்கிந்திய தீவுகள் அணி அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் தெரிவித்துள்ளது
  • மேற்கிந்திய தீவுகள் அணிக்காக கெயில் 285 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் கிறிஸ் கெயில்!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் கிறிஸ் கெயில்!
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
"ஓய்வு குறித்து நான் எதுவும் அறிவிக்கவில்லை" - கிறிஸ் கெயில்!
"ஓய்வு குறித்து நான் எதுவும் அறிவிக்கவில்லை" - கிறிஸ் கெயில்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற கெயிலுக்கு அழைப்பு!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற கெயிலுக்கு அழைப்பு!
முதல் ஒருநாள் போட்டி மழையால் தடை... மைதானத்தில் நடனமாடிய கோலி!
முதல் ஒருநாள் போட்டி மழையால் தடை... மைதானத்தில் நடனமாடிய கோலி!
Advertisement