"ரவி சாஸ்திரியின் நியமனம் கேலிக்கூத்தாக உள்ளது" - பிசிசிஐயை விமர்சிக்கும் ரசிகர்கள்!

Updated: 17 August 2019 16:49 IST

ரவி சாஸ்திரியை நியமனம் செய்ததற்கு சிலர் பிசிசிஐயை கடுமையாக விமர்சித்தனர். சிஏசியின் முடிவை "கேலிக்கூத்து" என்று சாடினர்.

Ravi Shastri Reappointed India Coach, Fans Savagely Troll BCCI
சாஸ்திரியின் பதிவி காலத்தில் முக்கியமான ஐசிசியின் போட்டிகள் நடக்கவுள்ளன. © AFP

ரவி சாஸ்திரியை மீண்டும் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக கபில் தேவ் தலைமை தாங்கும் சி.ஏ.சி கடந்த வெள்ளிக்கிழமை நியமித்தது. இந்த அறிவிப்பு வந்ததும், இதில் விருப்பமில்லாத ரசிகர்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர். தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பொறுப்பை பிசிசிஐ சிஏசியிடம் கொடுத்தது. அந்தக் குழுவில் கபில் தேவ், அன்சுமன் கேக்வாட் மற்றும் சாந்தா ரங்கசாமி உள்ளனர். சிலர் பிசிசிஐயை கடுமையாக விமர்சித்தனர். சிஏசியின் முடிவை "கேலிக்கூத்து" என்று சாடினர்.

சாஸ்திரி அடுத்த இரண்டு ஆண்டு காலத்துக்கு சிஏசியால் நியமிக்கப்பட்டுள்ளார்.அவரின் பதிவி காலம் 2021 டி20 உலகக் கோப்பை வரை தொடரும்.

தலைமை பயிற்சியாளர் பதவிக்கு சாஸ்திரியை தவிர ராபின் சிங், லால்சந்த் ராஜ்புட், நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெஸன் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி ஆகியோர் விண்ணப்பித்திருந்தனர். முன்னாள் மேற்கிந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர்கள் சொந்த காரணங்களுக்காக இந்தப் போட்டியில் இருந்து விலகினர். 

சிஏசியின் தலைவர் கபில் தேவ், ரவி சாஸ்திரியின் நியமனத்துக்கும் விராட் கோலிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறினார். முடிவை அறிவித்த கபில் தேவ், "விராட் கோலியின் கருத்தை கேட்டிருந்தார், அணியில் உள்ள மற்றவர்களின் கருத்தையும் கேட்டிருப்போம். நாங்கள் யாரையும் கேட்கவில்லை. அதற்கான தேவையும் இல்லை". என்றார்.

"எல்லோரும் சிறப்பானவர்கள். சில சமயம் சாஸ்திரி திறமை வாய்ந்தவராக தோன்றுவார். ஆனால், அவர்களில் பிரசண்டேஷன் வைத்து தான் பயிற்சியாளரை முடிவு செய்தோம்," என்றார் கபில் தேவ்.

சாஸ்திரியின் பதிவி காலத்தில் முக்கியமான ஐசிசியின் போட்டிகள் நடக்கவுள்ளன. டி20 உலகக் கோப்பை மற்றும் புதிதாக திட்டமிடப்பட்டுள்ள உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கவுள்ளன.

இந்தியா தன்னுடைய முதல் டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஆகஸ்ட் 22ம் தேதி ஆடவுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"தோனி ஒருநாள் போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வு எடுக்கக்கூடும்" - ரவி சாஸ்திரி!
"தோனி ஒருநாள் போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வு எடுக்கக்கூடும்" - ரவி சாஸ்திரி!
ரவி சாஸ்திரி முதல் ஹர்பஜன் சிங் வரை... இந்திய vs ஆஸி .தொடரில் கவனிக்க வேண்டிய வீரர்கள்!
ரவி சாஸ்திரி முதல் ஹர்பஜன் சிங் வரை... இந்திய vs ஆஸி .தொடரில் கவனிக்க வேண்டிய வீரர்கள்!
ரவி சாஸ்திரியின் பதிவில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன மைக்கேல் வாகன்!
ரவி சாஸ்திரியின் பதிவில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன மைக்கேல் வாகன்!
"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்" - ரவி சாஸ்திரி!
"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்" - ரவி சாஸ்திரி!
ரவி சாஸ்திரி, பங்களாதேஷ் பயிற்சியாளர் நேரடியாக ஈடன் கார்டனுக்கு சென்றனர்!
ரவி சாஸ்திரி, பங்களாதேஷ் பயிற்சியாளர் நேரடியாக ஈடன் கார்டனுக்கு சென்றனர்!
Advertisement