'மை பார்ட்னர் இன் கிரைம்' - கோலியின் அந்த பார்ட்னர் யார்?

Updated: 20 November 2019 15:17 IST

‘பார்ட்னர் இன் கிரைம்’ என கூறி அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் கோலி

Who is Virat Kohlis partner in Crime
பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது இந்தியா

இந்தியா அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் வரும் வெள்ளிகிழமை தொடங்கவுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியானது பகல்-இரவு பிங்க் பந்து போட்டியாகும். இந்த போட்டிக்கு இந்தியா அணி தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிற வேளையில் கேப்டன் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

‘பார்ட்னர் இன் கிரைம்' என கூறி அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் கோலி. அந்த பார்ட்னரின் முகம் தெரியாவிட்டாலும் அவர் தோனி தான் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. அந்த ஸ்டைலான போஸ் மற்றும் ‘எதிரணியின் பவுண்டரி பீல்டர்களிடம் இருந்து இரண்டு ரன்களை திருடுவதே அந்த கிரைம்' என்ற கேப்சன் இதனை உறுதிப்படுத்துகிறது.

உலகக்கோப்பை தொடருக்கு பின் கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளார் தோனி. இதனால் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. தோனி ஓய்வு பெற்று விட்டர் என்று கூட வதந்தி பரவியது. இந்நிலையில் சமீபத்தில் ராஞ்சியில் தோனி கிரிக்கெட் பேட் உடன் பயிற்சி செய்யும் புகைப்படம் வெளியாகி அனைத்து வதந்திகளுக்கும் முற்றுபுள்ளி வைத்தது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
அனுஷ்கா ஷர்மாவுடன் விராட் கோலி: இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்! 
அனுஷ்கா ஷர்மாவுடன் விராட் கோலி: இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்! 
“புதிய லோகோவை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது” - ஆர்சிபி கேப்டன் விராட் கோலி!
“புதிய லோகோவை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது” - ஆர்சிபி கேப்டன் விராட் கோலி!
விராட் கோலி மற்றும் அணியினருடன் புட்டாருருவுக்கு சென்ற அனுஷ்கா ஷர்மா!
விராட் கோலி மற்றும் அணியினருடன் புட்டாருருவுக்கு சென்ற அனுஷ்கா ஷர்மா!
“கேப்டனான எனக்கே தெரியல” - ஆர்சிபியின் சமூக வலைதள மாற்றங்கள் குறித்து கோலி!
“கேப்டனான எனக்கே தெரியல” - ஆர்சிபியின் சமூக வலைதள மாற்றங்கள் குறித்து கோலி!
“அவர் ஒரு ஏ கிளாஸ் வீரர்” - விராட் கோலியை புகழ்ந்த டிம் சவுதி!
“அவர் ஒரு ஏ கிளாஸ் வீரர்” - விராட் கோலியை புகழ்ந்த டிம் சவுதி!
Advertisement