''எல்லோருமே ரேஸ்ல இருக்கோம்'' - உலகக் கோப்பை குறித்து கோலி!

Updated: 14 March 2019 14:26 IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று தொடரை 3-2 என்ற கணக்கில் இழந்தது.

Virat Kohli Declares World Cup Race Wide Open After Australia Upset
ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்தியா நேரடியாக உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் தான் ஆடுகிறது. இடையே எந்த ஒருநாள் தொடரிலும் பங்கேற்கவில்லை.  © AFP

உலகக் கோப்பை தொடர் துவங்க இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், உலகக் கோப்பைக்கான போட்டி அதிகரித்துள்ளது. அனைத்து அணிகளுமே உலகக் கோப்பையை வெல்ல தகுதியான அணிகளாக உருவெடுத்துள்ளன. இதில் இந்த அணிதான் உலகக் கோப்பையை வெல்லும் என்று கணிக்க முடியாது என்று இந்திய கேப்டன் கோலி கூறியுள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று தொடரை 3-2 என்ற கணக்கில் இழந்தது. உலகக் கோப்பை தொடருக்கு முன் முக்கியமான தொடரை இந்தியா இழந்துள்ளது. இதன் பிறகு உலகக் கோப்பை குறித்து பேசிய கோலி ''எல்லா அணிகளுமே ரேஸில் உள்ளன. இதில் ஒரு அணியை குறைத்து மதிப்பிடுவது என்பது முடியாத விஷயம்'' என்றார்.

"உலகக் கோப்பையை வெல்லும் அணி என்று ஒரே ஒரு அணியை கணிக்க முடியாது. மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் வலிமையாக உள்ளன. ஏன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் எந்த நேரத்திலும் எதிரணியை வீழ்த்தும். நாமும் வலிமையான அணியாக உள்ளோம். அதனால் இதில் கணிப்பது என்பதற்கு இடமில்லை" என்றார்.

உலகக் கோப்பைக்கு முன் இந்தியாவுடனான தொடரை வென்று ஆஸ்திரேலியா பலம் பெற்றுள்ளது. இன்னும் ஸ்மித், வார்னர் தடை நீங்கி அணியில் இணைந்தால் கூடுதல் பலம் பெறும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்தியா நேரடியாக உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் தான் ஆடுகிறது. இடையே எந்த ஒருநாள் தொடரிலும் பங்கேற்கவில்லை. 

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய நம்பிக்கையோடு இருந்த இந்திய அணி 3-2 என இந்திய மண்ணில் தொடரை இழந்து உலகக் கோப்பைக்கு செல்லவுள்ளது. 

Comments
ஹைலைட்ஸ்
  • உலகக் கோப்பையில் எல்லா அணிகளுமே ரேஸில் உள்ளன: கோலி
  • இந்தியாவுடனான தொடரை வென்று ஆஸ்திரேலியா பலம் பெற்றுள்ளது
  • மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து,இங்கிலாந்து அணிகள் வலிமையாக உள்ளன: கோலி
தொடர்புடைய கட்டுரைகள்
கே.எல்.ராகுலை "பல பரிமாணம் கொண்ட வீரர்" என்றார் விராட் கோலி!
கே.எல்.ராகுலை "பல பரிமாணம் கொண்ட வீரர்" என்றார் விராட் கோலி!
இந்தியா vs ஆஸ்திரேலியா : 2-வது ஒருநாள் போட்டி ஸ்கோர் கார்டு!!
இந்தியா vs ஆஸ்திரேலியா : 2-வது ஒருநாள் போட்டி ஸ்கோர் கார்டு!!
India vs Australia 1st ODI: 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா!
India vs Australia 1st ODI: 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா!
IND vs AUS: விராட் கோலியின் உலக சாதனைக்கு இன்னும் ஒரு சதம் தேவை!
IND vs AUS: விராட் கோலியின் உலக சாதனைக்கு இன்னும் ஒரு சதம் தேவை!
"கோலி மற்றும் ஸ்மித் இடையே எந்த ஒப்பீடும் இல்லை" - கம்பீரின் உறுதியான பதில்!
"கோலி மற்றும் ஸ்மித் இடையே எந்த ஒப்பீடும் இல்லை" - கம்பீரின் உறுதியான பதில்!
Advertisement