டெய்லர் ஷிஃப்ட்டை விட பிரபலமான பென் ஸ்டோக்ஸ்!

Updated: 28 August 2019 17:52 IST

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ் பெயரை தான் விக்கிப்பீடியா தேடலில் அதிகமாக தேடியுள்ளனர்.

Ben Stokes Was More Popular Than Taylor Swift During Headingley Knock
நம்ப முடியாத சிறப்பான ஆட்டம் வெளிப்படுத்தியதால் ஸ்டோக்ஸ், டெஸ்ட் தரவரிசையில் முன்னேறியுள்ளார். © AFP

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ் பெயரை தான் விக்கிப்பீடியா தேடலில் அதிகமாக தேடியுள்ளனர். இதற்கு முன்னதாக அமெரிக்க பாடகர் டெய்லர் ஷிஃப்ட் பெயர் தான் அதிகம் தேடப்பட்ட பெயராக இருந்தது. இதை கிராஃபிகல் வரைப்படம் மூலம் விளக்கப்பட்டுள்ளது. இதனை ஐசிசி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறுபகிர்வு செய்து, "கடந்த வாரம் நடந்த ஆட்டத்தால், டெய்லர் ஷிஃப்ட்டை விடவும் பென் ஸ்டோக்ஸ் அதிகம் தேடப்பட்டுள்ளார்" என்று பதிவிட்டது. கிரிக்கெட்டின் உலகளாவிய ஆளும் குழுவும் டெய்லர் ஷிஃப்ட்டை மென்ஷன் செய்து, "இங்கு கெட்ட ரத்தம் இல்லை டெய் (டெய்லர் ஷிஃப்ட்),  ஆனால் ஸ்டோகீஸ் (பென் ஸ்டோக்ஸ்) ஆட்டம் எப்போதுமான சிறந்த காதல் கதை, " என்று டெய்லரின் பிரபலமாக "லவ் ஸ்டோரி" பாடல் வரிகளை குறிப்பிட்டது.

டெய்லர் ஸ்விஃப்ட்டின் ஹிட் டிராக்குகளை தொகுப்பதன் மூலம் ஐ.சி.சி அவர்களின் சுவாரஸ்யமான சொல் விளையாட்டைக் காட்டியது, அழகானது, வைல்டஸ்ட் ட்ரீம்ஸ், ஷேக் இட் ஆஃப், அவுட் ஆஃப் தி வுட்ஸ் - போன்ற வார்த்தைகளை ஒரு வரியில் இணைக்கப்பட்டிருந்தது.

நம்ப முடியாத சிறப்பான ஆட்டம் வெளிப்படுத்தியதால் ஸ்டோக்ஸ், டெஸ்ட் தரவரிசையில் முன்னேறியுள்ளார். ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டரில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் ஸ்டோக்ஸ்.

இரண்டாவது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 135 ரன்கள் எடுத்து ஆட்டத்தை வெற்றிக்கு வழிநடத்திய ஸ்டோக்ஸ், நான்கு முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனால், இரண்டு இடங்கள் முன்னேறி இப்போது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அவர் செப்டம்பர் 2017ம் ஆண்டு மூன்றாவது இடத்தை பிடித்தார். 

செப்டம்பர் 4 முதல் மான்செஸ்டரில் ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெறும் நான்காவது ஆஷஸ் டெஸ்டின் போது ஸ்டோக்ஸ் அடுத்து இடம்பெறவுள்ளார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட்: களத்தில் கோலியாக மாறிய ரோஹித் ஷர்மா!
இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட்: களத்தில் கோலியாக மாறிய ரோஹித் ஷர்மா!
பென் ஸ்டோக்ஸுக்கு ஆதரவு தெரிவித்த ஜோ ரூட் மற்றும் மைக்கெல் வாகன்!
பென் ஸ்டோக்ஸுக்கு ஆதரவு தெரிவித்த ஜோ ரூட் மற்றும் மைக்கெல் வாகன்!
வலிமிகுந்த சம்பவம் குறித்து வெளியிட்ட செய்தித்தாள் - கடுமையாக சாடிய ஸ்டோக்ஸ்!
வலிமிகுந்த சம்பவம் குறித்து வெளியிட்ட செய்தித்தாள் - கடுமையாக சாடிய ஸ்டோக்ஸ்!
"இப்போதிலிருந்து நான்
"இப்போதிலிருந்து நான் 'ஸ்பர்ஸ் அணி' ரசிகர்" - பென் ஸ்டோக்ஸ்!
டெய்லர் ஷிஃப்ட்டை விட பிரபலமான பென் ஸ்டோக்ஸ்!
டெய்லர் ஷிஃப்ட்டை விட பிரபலமான பென் ஸ்டோக்ஸ்!
Advertisement