இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற கெயிலுக்கு அழைப்பு!

Updated: 10 August 2019 12:47 IST

39 வயதான கிறிஸ் கெயில் 2014 செப்டம்பர் அன்று அவரின் கடைசியாக 103வது டெஸ்ட் போட்டியை ஆடினார்.

West Indies Resist Sentimental Chris Gayle Test Recall To Face India
இங்கிலாந்துக்கு எதிராக ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. © AFP

மேற்கிந்திய தீவுகள் தேர்வுக்குழுவினர் கிறிஸ் கெயிலை கடைசி டெஸ்ட் போட்டியாக இந்தியாவுக்கு எதிராக ஆடும்படி கேட்டுக்கொண்டுள்ளது. முதலில் அவர் இரண்டு டெஸ்ட் தொடரில் இணைக்கப்படவில்லை. 39 வயதான கிறிஸ் கெயில் 2014 செப்டம்பர் அன்று அவரின் கடைசியாக 103வது டெஸ்ட் போட்டியை ஆடினார். பின்னர், உலகக் கோப்பை போட்டியில் இடம்பெற்றார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பாக கிறிஸ் கெயில், இன்னொரு டெஸ்ட் போட்டியில் இடம்பெறவுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை கெயில் 7,214 ரன்கள் எடுத்துள்ளார். அதில் அதிகபடியாக 333 ரன்கள் எடுத்துள்ளார். 

இந்தியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது ஆட்டம் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 3 வரை ஜமைக்காவின் சபினா பூங்காவில் உள்ள தனது சொந்த மைதானத்தில் விளையாடப்படுகிறது. ஆனால், கிறிஸ் கெய்லின் இறுதி சர்வதேச தோற்றம் அடுத்த புதன்கிழமை போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருக்கும் என்று தெரிகிறது.

இந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதனால், அதே அணியில் தேர்வுக்குழு நம்பிக்கை வைத்துள்ளது. ஆனால், இதில் வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப் மற்றும் ஜோமெல் வாரிக்கன் காயம் காரணமாக இடம்பெறவில்லை.

26 வயதான கோர்வால் 55 போட்டிகளில் ஆடி, 260 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

"ரக்கீம் தொடர்ச்சியாக சிறந்து விளையாடி வருகிறார் மற்றும் போட்டியை வெற்றிக்கு அழைத்து செல்கிறார். அதனால் இந்த முறை டெஸ்ட் போட்டியில் தன்னை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்," தேர்வுக்குவின் தலைவர் ராபர்ட் ஹேன்ஸ் கூறினார்.

வெஸ்ட் இண்டீஸ் 'ஏ' அணியின் கேப்டன் ஷமர் ப்ரூக்ஸ் மட்டுமே அணியில் இடம் பெறாத மற்ற வீரர்.

இங்கிலாந்து தொடரின் இறுதி டெஸ்டைத் தவறவிட வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது டெஸ்ட் கேப்டன் ஜேசன், ஹோல்டருக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் கீமோ பால் அணியில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

"அல்ஸாரி உடல்நிலை குறித்து நாங்கள் கண்காணித்து வருகிறோம், ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாட இன்னும் தயாராக இல்லை என்று தோண்றுகிறது," என்றார் ஹேன்ஸ்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் கிறிஸ் கெயில்!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் கிறிஸ் கெயில்!
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
"ஓய்வு குறித்து நான் எதுவும் அறிவிக்கவில்லை" - கிறிஸ் கெயில்!
"ஓய்வு குறித்து நான் எதுவும் அறிவிக்கவில்லை" - கிறிஸ் கெயில்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற கெயிலுக்கு அழைப்பு!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற கெயிலுக்கு அழைப்பு!
முதல் ஒருநாள் போட்டி மழையால் தடை... மைதானத்தில் நடனமாடிய கோலி!
முதல் ஒருநாள் போட்டி மழையால் தடை... மைதானத்தில் நடனமாடிய கோலி!
Advertisement