"வரலாற்று வெற்றி உலகக் கோப்பைக்கு நம்பிக்கை அளிக்கிறது" : கேப்டன் கோலி

Updated: 21 January 2019 21:27 IST

"இது ஒட்டுமொத்த அணியின் வெற்றி, இந்த சமநிலையை உலகக் கோப்பையிலும் தொடருவோம்" என்று கூறினார் கோல்.

விராட் கோலி தலைமையிலான இந்திய ஆணி ஆஸ்திரேலிய மண்ணில் இருநாடுகளுக்கு இடையேயான தொடரை முதல்முறையாக கைப்பற்றியுள்ளது. இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்தியா ஒரு தொடரைக்கூட இழக்கவில்லை. டி20 தொடரை 1-1 என்ற நிலையில் சமன் செய்தது. டெஸ்ட் தொடரை 71 ஆண்டுகளில் முதல்முறையாக 2-1 என்ற கணக்கில் வென்று வரலாற்று வெற்றி பெற்றது. கடைசியாக நடந்த ஒருநாள் தொடரையும் வென்று சாதனை படைத்தது. இந்த போட்டிக்கு பின் பேசிய விராட் கோலி ''நியூசிலாந்து மற்றும் உலகக் கோப்பை தொடர்களுக்கு முன்னால் இந்த வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது" என்று கூறியுள்ளார்.

"இந்த தொடருக்கு முன் பலரும் எங்கள் அணி மீது விமர்சனங்களை வைத்தனர். ஆனால் அன்று யாராவது இந்த முடிவை கணித்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்" என்றார். மேலும், "இது ஒட்டுமொத்த அணியின் வெற்றி, இந்த சமநிலையை உலகக் கோப்பையிலும் தொடருவோம்" என்றார்.

இந்திய அணி 16 ஓவரில் 59 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தவித்த இக்கட்டான சூழலில் தோனி ஆட வந்தார். இந்திய கேப்டன் கோலியுடன் இணைந்து 54 ரன்களும், கேதர் ஜாதவுடன் 121 ரன்களும் எடுத்து இந்தியாவை வெற்றிக்கு அழைத்து செல்ல உதவினார். 

இந்த தொடரில் மட்டும் தோனி 3 அரைசதங்களுடன் 193 ரன்களை குவித்தார். கடைசி போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய சாஹல் ஆட்டநாயகன் விருதை வென்றார். .

கோலி குல்திபை நீக்கிவிட்டு சாஹலுக்கு வழங்கிய வாய்ப்பு ஏன் என்பது குறித்தும் விளக்கினார். சாஹலின் தேர்வு எவ்வளவு நியாயமானது என்பதை அவர் நிரூபித்துவிட்டதாகவும் கூறினார்.

நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கு பின் உலகக் கோப்பைக்கு அணியாக தயாராவது பற்றி கூறினார். வரும் ஜனவரி 23ம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான தொடர் துவங்கவுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்தியா ஒரு தொடரைக்கூட இழக்கவில்லை
  • அணியின் கூட்டு முயற்சி மகிழ்ச்சி அளிப்பதாக விராட் கூறினார்
தொடர்புடைய கட்டுரைகள்
"மீண்டும் அணியுடன் இணைந்தது மகிழ்ச்சி" - டெஸ்ட் பயிற்சியில் விராட் கோலி
"மீண்டும் அணியுடன் இணைந்தது மகிழ்ச்சி" - டெஸ்ட் பயிற்சியில் விராட் கோலி
ரசிகர்களின் இதயத்தை வென்ற அனுஷ்கா ஷர்மா பதிவிட்ட கோலியின் புகைப்படம்!
ரசிகர்களின் இதயத்தை வென்ற அனுஷ்கா ஷர்மா பதிவிட்ட கோலியின் புகைப்படம்!
ஓய்வுக்கு பிறகு தான் கற்றுக்கொள்ள நினைப்பது குறித்து பேசினார் கோலி!
ஓய்வுக்கு பிறகு தான் கற்றுக்கொள்ள நினைப்பது குறித்து பேசினார் கோலி!
"ரோஹித் ஷர்மா செய்வதை, கோலியால் கூட செய்ய முடியாது" - வீரேந்தர் சேவாக்
"ரோஹித் ஷர்மா செய்வதை, கோலியால் கூட செய்ய முடியாது" - வீரேந்தர் சேவாக்
விராட் கோலியை மிஞ்சி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
விராட் கோலியை மிஞ்சி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
Advertisement