ரிவர்ஸ் ஸ்வீப் சிக்ஸர் : ஐபிஎல் தொடருக்கு முன் யுவராஜ் அதிரடி!

Updated: 19 February 2019 11:20 IST

ஏர் இந்தியா மற்றும் மாலத்தீவுகள் இடையேயான போட்டியில் யுவராஜ் சிங் அசாதரணமாக ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் சிக்ஸர் அடிக்க, ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Yuvraj Singh Wows Fans With Audacious Reverse Sweep Six. Watch Video
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீண்டும் இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். © Twitter

 

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீண்டும் இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். மாலேயில் நடைபெற்ற ஏர் இந்தியா மற்றும் மாலத்தீவுகள் இடையேயான போட்டியில் யுவராஜ் சிங் அசாதரணமாக ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் சிக்ஸர் அடிக்க, ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

நட்பு ரீதியான போட்டியில் ஏர் இந்தியா அணிக்காக யுவராஜ் ஆடினார். மாலத்தீவுகள் அணியில் அதன் அதிபர் இப்ராஹிம், துணை அதிபர் பஸல் நஸிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

"இரு நாடுகளுக்கிடையே உள்ள நட்பை கிரிக்கெட் மூலம் மேம்படுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது" என்று விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் யுவராஜ் கூறினார்.

2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ஆடிய யுவராஜ், அதன் பின் அணியில் இடம் கிடைக்காமல் தடுமாறினார்.

கடைசியாக, 2017 ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியிலும், 2017 பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிராக டி20 போட்டியிலும் ஆடினார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு ஒரு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமாகியுள்ளார். சென்ற வருடம் அஷ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியில் ஆடிய யுவராஜ் 8 போட்டிகளில் வெறும் 65 ரன்கள் எடுத்தார்.

Comments
ஹைலைட்ஸ்
  • யுவராஜ் சிங் அசாதரணமாக ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் சிக்ஸர் அடித்தார்
  • நட்பு ரீதியான போட்டியில் ஏர் இந்தியா அணிக்காக யுவராஜ் ஆடினார்
  • ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ஆடவுள்ளார் யுவராஜ் சிங்
தொடர்புடைய கட்டுரைகள்
சோயப் அக்தரை பங்கமாக கலாய்த்த யுவராஜ் சிங்!
சோயப் அக்தரை பங்கமாக கலாய்த்த யுவராஜ் சிங்!
"ஃபிட்னஸ் சிலை" - கோலி மற்றும் பும்ராவை புகழ்ந்த யுவராஜ் சிங்!
"ஃபிட்னஸ் சிலை" - கோலி மற்றும் பும்ராவை புகழ்ந்த யுவராஜ் சிங்!
‘இது என்னப்பா யுவராஜுக்கு வந்த சோதனை’- கம்-பேக் போட்டியில் இப்படி அவுட் ஆகிட்டாரே #Video
‘இது என்னப்பா யுவராஜுக்கு வந்த சோதனை’- கம்-பேக் போட்டியில் இப்படி அவுட் ஆகிட்டாரே #Video
‘யுவராஜ் ரிட்டர்ன்ஸ்!’- ஓய்வுக்குப் பின்னர் கிரிக்கெட்டுக்கு கம்-பேக் கொடுக்கிறார்
‘யுவராஜ் ரிட்டர்ன்ஸ்!’- ஓய்வுக்குப் பின்னர் கிரிக்கெட்டுக்கு கம்-பேக் கொடுக்கிறார்
காயத்திலிருந்து மீண்டு
காயத்திலிருந்து மீண்டு 'பாட்டில் கேப் சேலஞ்ச்' செய்த ஷிகர் தவான்!
Advertisement