சொந்த மண்ணில் கெத்தாக இரண்டு கேட்ச்... அசத்திய கோலி!

Updated: 14 March 2019 14:37 IST

கடைசி ஒருநாள் போட்டியில் கோலி சொந்த ஊர் ரசிகர்கள் முன்னிலையில் இரண்டு அபாரமான கேட்ச்களை பிடித்து அசத்தினார். இதனை பிசிசிஐ தனது ட்விட் மூலம் பாராட்டியுள்ளது.

Virat Kohli Leaves Delhi Crowd Pumped With Two Sharp Catches
கோலி சொந்த ஊர் ரசிகர்கள் முன்னிலையில் இரண்டு அபாரமான கேட்ச்களை பிடித்து அசத்தினார். © AFP

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேப்டன் கோலியின் சொந்த ஊரான டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி சொந்த ஊர் ரசிகர்கள் முன்னிலையில் இரண்டு அபாரமான கேட்ச்களை பிடித்து அசத்தினார். சதமடித்த சில நிமிடங்களில் கவாஜாவை புவனேஷ்வர் குமார் பந்தில் எக்ஸ்ட்ரா கவர் பகுதியில் அபாரமாக கேட்ச் செய்து வெளியேற்றினார். அதன் பின் ஆட வந்த மேக்ஸ்வெல்லை ஜடேஜா பந்தில் கேட்ச் செய்து ஒற்றை இலக்கத்தில் வெளிறேற்றினார். இதனை பிசிசிஐ தனது ட்விட் மூலம் பாராட்டியுள்ளது.

இந்த தொடரில் கோலி 2 சதங்கள் அடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்த தொடரின் கடைசி போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியா அபாரமாக ஆட்டத்தை துவங்கியது. முதல் விக்கெட்டுக்கு பின்ச்-கவாஜா இணை 75 ரன்களையும், இரண்டாவது விக்கெட்டுக்கு கவாஜா-ஹேண்ட்ஸ்கோம்ப் இணை 99 ரன்களையும் குவித்தது. பின்னர் யாரும் அந்த வேகத்தை சரியாக முன்னெடுக்காததால் 300 ரன்களை கடக்க முடியாமல் போனது. 

50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் கவாஜா 100 ர்னகளையும், ஹேண்ட்ஸ்கோம்ப் 52 ரன்களையும் குவித்தனர். இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், ஷமி, ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய இந்திய அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் வழக்கம் போல் சொதப்பினர். கோலி 20, த்வான் 12, ஷங்கர், பன்ட் தலா 16, ஜடேஜா டக் என சொற்ப ரன்களில் பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தர்.  இந்திய வீரர்களில் ரோஹித் 56, புவனேஷ்வர் குமார் 46, ஜாதவ் 44 என ஓரளவுக்கு சிறப்பாக ஆடினர். எனினும் இந்திய அணி 237 ரன்களுக்கு ஆட்டமிழந்த‌து.இதனால் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.ஆஸ்திரேலிய தரப்பில் ஸம்பா 3 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் ரிச்சர்ட்ஸன்,ஸ்டோனின்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், லயன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது ஆஸ்திரேலியா. இந்த தொடரில் இந்தியா முதல் இரண்டு போட்டிகளையும், ஆஸ்திரேலியா அடுத்த மூன்று போட்டிகளையும் வென்று 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றது. உலகக் கோப்பைக்கு முன்பு இந்தியா ஆடும் கடைசி தொடர் இது. இதில் பல பரிசோதனை முயற்சிகளை செய்து கைகொடுக்காததால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. மேலும் தோனிக்கு கடைசி இரண்டு போட்டிகளுக்கு ஓய்வளித்ததும் தவறு என விமர்சிக்கப்படுகிற‌து.

Comments
ஹைலைட்ஸ்
  • விராட் கோலியின் கேட்ச்சை பிசிசிஐ தனது ட்விட் மூலம் பாராட்டியுள்ளது
  • 5வது ஒருநாள் போட்டி கோலியின் சொந்த ஊரான டெல்லியில் நடைபெற்றது
  • இந்த தொடரில் கோலி 2 சதங்கள் அடித்திருக்கிறார்
தொடர்புடைய கட்டுரைகள்
"ஈகோவை கைவிடுங்கள்" - டெஸ்ட் போட்டியின் போது கோலி படிக்கும் புத்தகம்!
"ஈகோவை கைவிடுங்கள்" - டெஸ்ட் போட்டியின் போது கோலி படிக்கும் புத்தகம்!
"டெண்டுல்கரின் ஒரு சாதனையை கோலியாலும் முறியடிக்க முடியாது" - சேவாக்!
"டெண்டுல்கரின் ஒரு சாதனையை கோலியாலும் முறியடிக்க முடியாது" - சேவாக்!
"என் வாழ்க்கையில் கிடைத்த வரம் அனுஷ்கா" - காதலை வெளிப்படுத்திய கோலி!
"என் வாழ்க்கையில் கிடைத்த வரம் அனுஷ்கா" - காதலை வெளிப்படுத்திய கோலி!
"நான் சுயநலவாதியல்ல" - சதமடிக்காதது குறித்து ரஹானே!
"நான் சுயநலவாதியல்ல" - சதமடிக்காதது குறித்து ரஹானே!
பிசிசிஐ வெளியிட்டுள்ள ரிச்சர்ட்ஸ் கோலியின் சிறப்பு உரையாடல் டீசர்!
பிசிசிஐ வெளியிட்டுள்ள ரிச்சர்ட்ஸ் கோலியின் சிறப்பு உரையாடல் டீசர்!
Advertisement