தடைக்குப்பின் அணிக்கு திரும்பி ஒற்றை கை கேட்ச் செய்து அசத்திய ஸ்மித்!

Updated: 06 May 2019 17:55 IST

ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னர் இருவரும் பந்தை சேதப்படுத்திய சர்ச்சைக்கு பின் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பி தங்களின் முதல் போட்டியில் ஆடியுள்ளனர்.

Steve Smith Announces Australia Return With Stunning One-Handed Catch In World Cup Warm-Up. Watch
டாம் லாதமுக்கு பெகன்ட்ராஃப் வீசிய பந்தை அபாரமான கேட்சை ஒற்றை கையில் பிடித்து அசத்தினார் ஸ்மித்.  © Twitter

ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னர் இருவரும் பந்தை சேதப்படுத்திய சர்ச்சைக்கு பின் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பி தங்களின் முதல் போட்டியில் ஆடியுள்ளனர். உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இருவரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடினர். வார்னர் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடி லீக் சுற்றின் முடிவில் அதிக ரன்களை குவித்தவராகவும், ஸ்மித் ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின் அபாரமாக ஆடினார். தற்போது இருவரும் ஆஸ்திரேலிய அணிக்காக நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் களமிறங்கினர்.

இந்த போட்டியில் நியூசிலாந்து லெவன் அணியின் பேட்டிங்கின் போது, டாம் லாதமுக்கு பெகன்ட்ராஃப் வீசிய பந்தை அபாரமான கேட்சை ஒற்றை கையில் பிடித்து அசத்தினார் ஸ்மித். 

டாஸ் வென்ற கேப்டன் பின்ச் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஓராண்டு தடை விதிக்கப்பட்டனர்.

பாட் கம்மின்ஸ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்து 215 ரன்கள் குவித்தது.

நியூசிலாந்து அணி வில்லியம்சன், கப்தில் மற்றும் போல்ட் இல்லாத அணியாக பலமில்லாமல் களமிறங்கியது. ஐபிஎல் தொடரில் அவர்கள் பங்கேற்றிருப்பதால் அவர்களால் இந்த தொடரில் ஆட முடியவில்லை.

ப்ளெண்டல் 77 ரன் குவித்தார். கம்மின்ஸ் 3-36 என அபாரமாக பந்துவீசினார். கோல்டர் நைல் மற்றும் பெகன்ட்ராஃப் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்
"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்
Ashes 2019: கண்ணாடி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்மித் மற்றும் லீச்!
Ashes 2019: கண்ணாடி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்மித் மற்றும் லீச்!
Ashes 2019: ஸ்டீவ் ஸ்மித்தின் ஆஷஸ் சாதனைகள்!
Ashes 2019: ஸ்டீவ் ஸ்மித்தின் ஆஷஸ் சாதனைகள்!
"Sand paperஐ விட பேட் வலிமையானது" - ஸ்மித்தை பாராட்டிய இங்கிலாந்து ரசிகர்கள்!
"Sand paperஐ விட பேட் வலிமையானது" - ஸ்மித்தை பாராட்டிய இங்கிலாந்து ரசிகர்கள்!
முதலாம் ஆண்டு திருமண நாளில் மனைவிக்கு ஸ்பெஷல் வாழ்த்து சொன்ன ஸ்மித்!
முதலாம் ஆண்டு திருமண நாளில் மனைவிக்கு ஸ்பெஷல் வாழ்த்து சொன்ன ஸ்மித்!
Advertisement