ஆங்கிலத்தில் பேசிய முகமது ஷமி: ஹிந்தியில் பதிலளித்த சைமன்!

Updated: 29 January 2019 19:37 IST

நியூசிலாந்து மூன்றாவது ஒருநாள் போட்டியின் வெற்றியைத் தொடர்ந்து ஷமி மற்றும் விராட் கோலி இருவரும் சைமனுடன் உரையாடலில் ஈடுபட்டனர்.

Virat Kohli, Mohammed Shami Share A Laugh On Simon Doull
நன்றாக ஆடி 93 ரன்கள் எடுத்திருந்த டெய்லரின் விக்கெட்டை கைப்பற்றனார் ஷமி. © Twitter

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை பெற்றார் முகமது ஷமி. நடந்து கொண்டிருக்கும் தொடரில், விராட் கோலிக்கு இதுவே கடைசி போட்டி. கடைசி இரண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து மூன்றாவது ஒருநாள் போட்டியின் வெற்றியைத் தொடர்ந்து ஷமி மற்றும் விராட் கோலி இருவரும் சைமனுடன் உரையாடலில் ஈடுபட்டனர்.

சைமன் ஷமியை பார்த்து "உங்கள் ஆங்கலம் சிறப்பாக உள்ளது" என்று கூறியதும் கோலி மற்றும் ஷமி இருவரும் சிரிப்பை அடக்க முடியாமல் போயினர்.

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது, அதிக காற்று வீசியதில் பந்து வீச எவ்வளவு சிரமமாக இருந்தது என்பதை ஷமி ஆங்கிலத்தில் விளக்கினார். அதற்கு சைமன் ஹிந்தியில் பதில் அளித்தார். இதுவே அவர்களின் சிரிப்புக்கு காரணமாக அமைந்தது.

நன்றாக ஆடி 93 ரன்கள் எடுத்திருந்த டெய்லரின் விக்கெட்டை கைப்பற்றனார் ஷமி. அடுத்தடுத்த விக்கெட்டுகள் வீழ்த்தியதால், நியூசிலாந்து அணி 243 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இலக்கை எளிதில் எட்ட 60 ரன்கள் எடுத்து உதவினார் கோலி. கடைசி இரண்டு போட்டிகளில் கோலிக்கு பதிலாக ரோஹித் ஷர்மா அணியை வழிநடத்துவார். அடுத்த ஒருநாள் போட்டி ஹமில்டனில் உள்ள செடன் பார்க்கில் நடைபெறுகிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • சைமனின் பதில் கோலி மற்றும் ஷமி இருவருக்கும் சிரிப்பை வரவைத்தது
  • மூன்றாது ஒருநாள் போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் ஷமி
  • கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் கோலிக்கு ஓய்வு அளிப்பட்டுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
இந்திய அணியின் புது பயிற்சியாளர் இன்று தேர்வு செய்யப்படுகிறார்...!
இந்திய அணியின் புது பயிற்சியாளர் இன்று தேர்வு செய்யப்படுகிறார்...!
"நல்லவேளை விரல் உடையவில்லை" - 3வது ஒருநாள் போட்டிக்கு பின் விராட் கோலி!
"நல்லவேளை விரல் உடையவில்லை" - 3வது ஒருநாள் போட்டிக்கு பின் விராட் கோலி!
சர்வதேச போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் விராட் கோலி!
சர்வதேச போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் விராட் கோலி!
3வது ஒருநாள்: கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவுக்கு சொந்தமாக போகும் புது சாதனை?
3வது ஒருநாள்: கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவுக்கு சொந்தமாக போகும் புது சாதனை?
"ஒருநாள் போட்டியில் கோலி 75-80 சதங்கள் குவிப்பார்" - கணிக்கும் வாசிம் ஜாபர்!
"ஒருநாள் போட்டியில் கோலி 75-80 சதங்கள் குவிப்பார்" - கணிக்கும் வாசிம் ஜாபர்!
Advertisement