மோசமான ஹிட் விக்கெட்டுக்காக கேலி செய்யப்பட்ட சோயிப் மாலிக்

Updated: 18 May 2019 11:15 IST

பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் ஒருநாள் போட்டியில் ஹிட் விக்கெட் மூலம் இரண்டு மு8றை அவுட் ஆகும் 8வது வீரர் என்ற மேசமான சாதனையை படைத்தார்.

Shoaib Malik Clatters His Own Stumps, Twitter Can
© Screengrab @englandcricket

பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் ஒருநாள் போட்டியில் ஹிட் விக்கெட் மூலம் இரண்டு மு8றை அவுட் ஆகும் 8வது வீரர் என்ற மேசமான சாதனையை படைத்தார். இந்த பட்டியலில் ஆலன் பார்டர், சங்ககாரா மிஸ்பா உல் ஹக் ஆகியோரும் உள்ளனர்.மாலிக் முதல் முறையாக 2003ல் ஹிட் விக்கெட் மூலம் அவுட் ஆனார். . தற்போது இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் மார்க் வுட் பந்தை லேட் கட் ஆட முயன்றார். அப்போது பந்து வருவதற்குள்ளாகவே ஸ்டெம்பை பேட்டால் அடிக்க ஹிட் விக்கெட் ஆனார். அவர் 26 பந்தில் 41 ரன்கள் குவித்து அதிரடியாக துவங்கினார்.

இந்த்க விக்கெட் வீடியோ வேகமாக வைரலானது . சீனியர் வீரர் என்றும் பாராமல் இணையதளங்களில் இவர் கேலிக்கு உள்ளானார்.

பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 71 ரன்கள் குவித்து இங்கிலாந்துக்கு மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி தேடி தந்தார்.

இங்கிலாந்து பாகிஸ்தானுக்கு எதிரான இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது.

341 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 201/1 என்ற நிலையில் இருந்தது. 114 ரன்களுக்கு ஜேஸன் ராய் ஆட்டமிழந்ததும் 3 விக்கெட்டுகளை 7 ரன்களுக்குள் இழந்தது.

மொயின் அலி டக் அவுட் ஆக 316/5 என்ற நிலையை எட்டியது. ஆனால் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 71, டாம் குரான் 31 என இங்கிலாந்து வெற்றியை 3 பந்துகள் மீதமிருக்கையில் வென்றது.

மோசமான ஃபீல்டிங் தோல்விக்கு காரணம் என்று பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் கூறியுள்ளார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
கனடா ஜி20 போட்டி: கண்ணாடி ஜன்னல்கள் உடைய சிக்ஸர் அடித்த சோயிப் மாலிக்!
கனடா ஜி20 போட்டி: கண்ணாடி ஜன்னல்கள் உடைய சிக்ஸர் அடித்த சோயிப் மாலிக்!
“எனது ரசிகர்களே…”- ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற ஷோயப் மாலிக் உருக்கமான மெஸேஜ்!
“எனது ரசிகர்களே…”- ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற ஷோயப் மாலிக் உருக்கமான மெஸேஜ்!
இந்தியா-பாகிஸ்தான் போட்டி... கிண்டல் விளம்பரங்களை சாடிய சனியா மிர்ஸா!
இந்தியா-பாகிஸ்தான் போட்டி... கிண்டல் விளம்பரங்களை சாடிய சனியா மிர்ஸா!
மோசமான ஹிட் விக்கெட்டுக்காக கேலி செய்யப்பட்ட சோயிப் மாலிக்
மோசமான ஹிட் விக்கெட்டுக்காக கேலி செய்யப்பட்ட சோயிப் மாலிக்
2019 உலகக் கோப்பை பாகிஸ்தான் அணிக்கு சர்ஃப்ராஸ் தான் கேப்டன் - பிசிபி
2019 உலகக் கோப்பை பாகிஸ்தான் அணிக்கு சர்ஃப்ராஸ் தான் கேப்டன் - பிசிபி
Advertisement