மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கு முன் ஷிகர் தவான் தீவிர பயிற்சி!

Updated: 24 July 2019 18:09 IST

ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்கவிருக்கும் தொடருக்கு பயிற்சி மேற்கொள்ள தொடங்கியுள்ளார்.

Shikhar Dhawan "Working On Reflexes" Ahead Of The West Indies Tour - Watch
உலகக் கோப்பையில் இரண்டு போட்டியில் ஆடிய ஷிகர் தவான் 125 ரன்கள் குவித்தார். © AFP

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணியில், தொடக்க வீரர் ஷிகர் தவான் இடம்பெற்றுள்ளார். ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்கவிருக்கும் தொடருக்கு பயிற்சி மேற்கொள்ள தொடங்கியுள்ளார். உலகக் கோப்பையில், பேட் கம்மின்ஸ் வீசிய பந்தில் காயம் ஏற்பட்டு உலகக் கோப்பையிலிருந்து வெளியேறினார் ஷிகர் தவான். இடது கை பேட்ஸ்மேன் இவர், காயாத்திலிருந்து மீண்டு வந்து நெட் பயிற்சி செய்வது போன்ற வீடியோ பதிவிட்டார். 33 வயதான ஷிகர் தவான் இன்ஸ்டாகிராமில் இன்னொரு வீடியோவை பதிவிட்டார். அதில், மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணத்துக்கு செல்வதற்கு முன் கேட்ச் பிடித்தல் போன்ற பயிற்சிகளில் ஈடுப்பட்டுவருகிறார். 

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்துக்கு இந்திய அணியை எம்எஸ்கே பிரசாத் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். இந்தச் சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைப்பெறவுள்ளது. அனைத்து விதமாக போட்டிகளுக்கும் கோலி தான் கேப்டன். 

அனைத்து விதமான தொடர்களிலும் ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட ஜடேஜாவும் மூன்று அணியிலும் இடம்பெற்றுள்ளார்.

ராணுவத்தில் பயிற்சி பெறுவதற்காக தோனி இரண்டு மாதங்கள் ஓய்வு கேட்டு விலகியதால், குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிக்கு ரிஷப் பன்ட் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் இந்திய அணி முதலில் 3 டி20 போட்டிகள் ஆடவுள்ளது. அதன்பிறகு, 3 ஒருநாள் போட்டிகள் பின்னர் 2 டெஸ்ட் போட்டிகள் ஆடவுள்ளது. இந்தச் சுற்றுப்பயணம் செப்டம்பர் 3ம் தேதி முடிவடைகிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • அனைத்து விதமான தொடருக்கும் ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • உலகக் கோப்பையில் காயம் ஏற்பட்ட ஷிகர் தவான் போட்டிகளுக்கு திரும்பியுள்ளார்
  • இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
T20I Rankings: தரவரிசையில் ரோஹித், கோலி, தவான் முன்னேற்றம்
T20I Rankings: தரவரிசையில் ரோஹித், கோலி, தவான் முன்னேற்றம்
"ஷிகர் தவானை அவமதிக்கவில்லை" - விளக்கமளித்த தப்ரைஸ் ஷம்சி!
"ஷிகர் தவானை அவமதிக்கவில்லை" - விளக்கமளித்த தப்ரைஸ் ஷம்சி!
தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்த தவானின் வீடியோவை வெளியிட்ட ரோஹித் ஷர்மா!
தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்த தவானின் வீடியோவை வெளியிட்ட ரோஹித் ஷர்மா!
"ரோஹித், ஜடேஜா இருவரும் பொறுப்பான, அன்பான அப்பாக்கள்" - ஷிகர் தவான்!
"ரோஹித், ஜடேஜா இருவரும் பொறுப்பான, அன்பான அப்பாக்கள்" - ஷிகர் தவான்!
டேவிட் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சைப் பார்த்த கோலியின் வைரல் ரியாக்‌ஷன்!
டேவிட் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சைப் பார்த்த கோலியின் வைரல் ரியாக்‌ஷன்!
Advertisement