முதல் குழந்தையை எதிர்பார்க்கும் ஆன்ரே ரஸல் தம்பதியினர்!

Updated: 18 September 2019 11:42 IST

ஆன்ரே ரஸல் மற்றும் அவரின் மனைவி ஜேஸிம் லோரா இருவரும் தங்களின் முதல் குழந்தையை எதிர்பார்ப்பதை அறிவித்தார். இது 'இன்னொரு ஆசீர்வாதம்' என்று குறிப்பிட்டார்.

Andre Russell Announces Arrival Of First Baby, Reveals Gender In Style. Watch
ரஸல் கடைசியாக மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 2019 உலகக் கோப்பை போட்டியில் விளையாடினார். © Instagram

மேற்கிந்திய தீவுகள் ஆல் ரவுண்டர் ஆன்ரே ரஸல், செவ்வாய்க்கிழமை, அவரும் அவரின் மனைவி ஜேஸிம் லோரா இருவரும் தங்களின் முதல் குழந்தையை எதிர்பார்ப்பதை அறிவித்தார். இது 'இன்னொரு ஆசீர்வாதம்' என்று குறிப்பிட்டார். 31 வயதான இவர், பார்ட்டியில் குழந்தையின் பாலினத்தை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தினார். ரஸல் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோவில், லோரா கையில் இருந்த பந்தை ரஸல் வைத்திருந்த பேட்டை நோக்கி வீசினார். அந்தப் பந்தை ரஸல் அடித்த, அது பிங்க் நிற புகையாக பறந்தது. "பெண் குழந்தை, வாழ்க்கையில் இன்னொரு ஆசீர்வாதம். ஆணோ, பெண்ணோ அது பிரச்னை இல்லை. ஆரோக்கியமான குழந்தையை தான் கடவுளிடம் கேட்கிறேன் #babyrussell," என்று வீடியோவுடம் பதிவிட்டார்.

இந்திய வீடியோவுக்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

"என்னுடைய அழைப்பு எங்கே. வாழ்த்துக்கள் ப்ரோ. இன்னொரு அதிர்ஷ்டமான பெண்," என்று மேற்கிந்திய தீவுகள் கிறிஸ் கெயில் வீடியோவுக்கு பதிலளித்தார்.

"பாதுகாப்பான கர்ப்ப காலத்துக்கும் வெற்றிகரமான பிரசவத்துக்கும் வாழ்த்துக்கள், கார்லஸ் பிரத்வைட் கூறினார்.

"மனைவிக்கு ஆரோக்கியமான கர்ப்ப காலத்துக்கு வாழ்த்துக்கள் @ar12russell" தரென் சாமி கூறினார்.

"பெண்கள் உலகையே ஆள்கிறார்கள்... வாழ்த்துக்கல்," சாமுவேல் பத்ரி கூறினார்.

ரஸல் கடைசியாக மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 2019 உலகக் கோப்பை போட்டியில் விளையாடினார். அப்போது அவருக்கு முழங்கால் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு, இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரை அவர் தவறவிட்டார்.

முதல் மற்றும் இரண்டாவது போட்டிகளுக்கான 14 பேர் கொண்ட அணியில் ரஸல் பெயரிடப்பட்டார். இது தொடருக்கு முன்னர் உடற்பயிற்சி மதிப்பீட்டில் தேர்ச்சி பெறவில்லை.

ஆல்ரவுண்டர் கனடாவில் நடந்த ஜிடி20 போட்டியில் விளையாடும்போது சில அசௌகரியங்களை அனுபவித்தார். மேலும், அவர் சொந்த மண்ணில் நடக்கும் தொடருக்கு தான் தயாராக இல்லை என தேர்வுக்குழுவுக்கு தெரிவித்தார்.

அணியில் ரஸல் இடம்பெறாத காரணத்தால், மேற்கிந்திய தீவுகள் 0-3 என்ற கணக்கில் இந்தியாவிடம் தோற்றது.

Comments
ஹைலைட்ஸ்
  • ரஸல் மற்றும் அவரின் மனைவி தங்களின் முதல் குழந்தையை எதிர்பார்க்கின்றனர்
  • ரஸல் இதை 'இன்னொரு ஆசீர்வாதம்' என்று குறிப்பிட்டார்
  • குழந்தையின் பாலினத்தை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தினார் ரஸல்
தொடர்புடைய கட்டுரைகள்
முதல் குழந்தையை எதிர்பார்க்கும் ஆன்ரே ரஸல் தம்பதியினர்!
முதல் குழந்தையை எதிர்பார்க்கும் ஆன்ரே ரஸல் தம்பதியினர்!
‘யுவராஜ் ரிட்டர்ன்ஸ்!’- ஓய்வுக்குப் பின்னர் கிரிக்கெட்டுக்கு கம்-பேக் கொடுக்கிறார்
‘யுவராஜ் ரிட்டர்ன்ஸ்!’- ஓய்வுக்குப் பின்னர் கிரிக்கெட்டுக்கு கம்-பேக் கொடுக்கிறார்
உலகக்கோப்பை தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரஸல் விலகல்!!
உலகக்கோப்பை தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரஸல் விலகல்!!
கொல்கத்தாவை வென்று ப்ளே ஆஃபை உறுதி செய்யுமா மும்பை!
கொல்கத்தாவை வென்று ப்ளே ஆஃபை உறுதி செய்யுமா மும்பை!
2019 உலகக் கோப்பைக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு!
2019 உலகக் கோப்பைக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு!
Advertisement