ரோஹித் ஷர்மாவின் குழந்தை சமைராவின் ''க்யூட் சிரிப்பு''

Updated: 12 February 2019 15:42 IST

டிசம்பர் 31, 2018 அன்று ரோஹித் ஷர்மாவுக்கு அழகான குழந்தை பிறந்தது. அப்போது ரோஹித் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியில் ஆடிக்கொண்டிருந்தார்

Rohit Sharma
ரோஹித் ஷர்மாவுக்கு டிசம்பர் 31ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. © Instagram

இந்திய கிரிகெட் வீரர் ரோஹித் ஷர்மாவின் மனைவி ரித்திகா இன்ஸ்டாகிராமில் தனது குழந்தை சமைராவின் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அழகாக சிரிக்கும் குழந்தை பார்ப்பதற்கு அப்படியே ரோஹித் ஷர்மாவை போல் உள்ளது. இதனை இணையத்தில் ரசிகர்கள் அதிக அளவில் கொண்டாடி வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் டிசம்பர் 2015ல் திருமணம் நடந்தது. டிசம்பர் 31, 2018 அன்று ரோஹித் ஷர்மாவுக்கு அழகான குழந்தை பிறந்தது. அப்போது ரோஹித் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியில் ஆடிக்கொண்டிருந்தார். 

கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்காமல் ரோஹித், குழந்தையை பார்ப்பதற்காக இந்தியா திரும்பினார். குழந்தையை பார்த்த பின்பு ஜனவரி 8ம் தேதி மீண்டும் ஒருநாள் அணியோடு சேர ஆஸ்திரேலியா கிளம்பி சென்றார். அந்த தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது. 

நான்காவது டெஸ்ட்டிலிருந்து விடுபட்டு இந்தியா திரும்பிய ரோஹித் குழந்தையுடன் நேரத்தை செலவழித்துவிட்டு ஒரு புகைப்படத்தையும் ட்விட்டரில் பதிவிட்டார். அதில் தனது குழந்தையின் பெயரை குறிப்பிட்டிருந்தார். அவரது குழந்தைக்கு சமைரா என்று பெயரிட்டுள்ளோம் என்றார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Ritika Sajdeh (@ritssajdeh) on

முன்னதாக இந்தியா வந்த ரோஹித் ஷர்மா தனது குழந்தையின் முதல் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் முகம் தெரியாத வண்ணம் தனது குழந்தையின் விரல்களை பிடித்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் "Well hello world! Let's all have a great 2019." என்று பதிவிட்டிருந்தார்.  பதிவிட்ட 2 மணி நேரத்தில் இந்த ட்விட் 37 ஆயிரம் லைக்குகளை பெற்றது.

விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டதால் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை ரோஹித் வழிநடத்தினார். இந்த தொடரில் மார்டின் கப்திலின் அதிக ரன் குவித்த டி20 வீரர் என்ற பெருமையை தனதாக்கினார் ரோஹித். 

ஒருநாள் தொடரை 4-1 என்ற கண்ணில் வென்றும், டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது இந்தியா. இதன் மூலம் இந்தியாவின் தொடர்ந்து 9 டி20 தொடர்களை தோற்காமல் இருந்த சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது நியூசிலாந்து. 

இந்தியா அடுத்து ஆஸ்திரேலியாவுடன் இந்தியாவில் 5 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் ஆடவுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • ஷர்மாவின் மனைவி ரித்திகா இன்ஸ்டாகிராமில் சமைராவின் வீடியோவை பதிவிட்டார்
  • சமைராவின் சிரிப்பை இணையத்தில் ரசிகர்கள் அதிக அளவில் கொண்டாடி வருகின்றனர்
  • அதிக ரன் குவித்த டி20 வீரர் என்ற பெருமையை தனதாக்கினார் ரோஹித்
தொடர்புடைய கட்டுரைகள்
#OnThisDay ஒருநாள் போட்டியில் சேவாக்கின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா!
#OnThisDay ஒருநாள் போட்டியில் சேவாக்கின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா!
India vs Bangladesh: 3வது போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
India vs Bangladesh: 3வது போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
இந்தியா vs பங்களாதேஷ் 3வது டி20 போட்டி: எப்போது தொடங்குகிறது?
இந்தியா vs பங்களாதேஷ் 3வது டி20 போட்டி: எப்போது தொடங்குகிறது?
ரோஹித் ஷர்மாவுக்கு 100வது டி20 போட்டிக்கான தொப்பி வழங்கியது யார் தெரியுமா?
ரோஹித் ஷர்மாவுக்கு 100வது டி20 போட்டிக்கான தொப்பி வழங்கியது யார் தெரியுமா?
"ரோஹித் ஷர்மா செய்வதை, கோலியால் கூட செய்ய முடியாது" - வீரேந்தர் சேவாக்
"ரோஹித் ஷர்மா செய்வதை, கோலியால் கூட செய்ய முடியாது" - வீரேந்தர் சேவாக்
Advertisement