விநோதமாக ஷாட் ஆடிய போல்ட்.. விழுந்து விழுந்து சிரித்த ரோஹித்!

Updated: 25 January 2019 14:12 IST

ட்ரண்ட் போல்ட், சஹாலின் பந்தை எதிர்கொண்டு விநோதமான ஷாட்களை ஆடி பந்தை தடுக்க முயன்றார். அதனை கண்டு ரோஹித் சிரித்தார்

Rohit Sharma In Splits After Trent Boult
ஆட்டத்தின் 36-வது ஓவரில்  நடந்த சம்பவம் ரோஹித் ஷர்மாவை சிரிப்புக்குள்ளாக்கியது. © AFP

நியூசிலாந்து அணி இந்தியாவிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் முதலாவது ஒருநாள் போட்டியில் தோல்வியுற்றது. குல்தீப் மற்றும் சஹாலின் சுழலில் 157 ரன்களுக்கு சுருண்டது. ஆட்டத்தின் 36வது ஓவரில்  நடந்த சம்பவம் ரோஹித் ஷர்மாவை சிரிப்புக்குள்ளாக்கியது.

நியூசிலாந்து அணியின் 11வது வீரரான ட்ரண்ட் போல்ட், சஹாலின் பந்தை எதிர்கொண்டார். அப்போது விநோதமான ஷாட்களை ஆடி பந்தை தடுக்க, அதனை கண்டு ரோஹித் சிரித்தார்.

அதன்பின் வெறும் 10 பந்துகளை சந்தித்த போல்ட், தோனி கொடுத்த ஐடியாவால் அவுட் ஆனார். 

முன்னதாக டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூசிலாந்து 157 ரன்களுக்கு சஹால், குல்தீப் சுழலில் சுருண்டது. அதன் பின் ஆடிய இந்திய அணி சிறப்பாக ஆடி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சஹால், குல்தீப் இருவரும் சேர்ந்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வழி வகுத்தனர்.

சூரிய ஒளி காரணமாக தடைபட்ட ஆட்டத்தில் 2 ரன்கள் இலக்கில் குறைக்கப்பட்டது.  தவான் , கோலியின் அதிரடி ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

34.5 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து, 156 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. தவான் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கோலி 45 ரன்னில் ஆட்டமிழந்தார். ராயுடு ஆட்டமிழக்காமல் 13 ரன்கள் எடுத்திருந்தார். 

அடுத்த போட்டி 26-ம் தேதி நடக்கிறது. இந்தியா இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • போல்ட், பந்துகளை தடுக்க செய்த முயற்சி ரோஹித்தை சிரிப்புக்குள்ளாகியது
  • சஹாலின் பந்துகளை விநோதமாக ஆடி பந்தை தடுத்தார் போல்ட்
  • 8 விக்கெட் வித்தியாசத்தில் முதலாவது ஒருநாள் போட்டியை வென்றது இந்தியா
தொடர்புடைய கட்டுரைகள்
டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பு பீச்சில் நேரம் கழிக்கும் இந்திய வீரர்கள்!
டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பு பீச்சில் நேரம் கழிக்கும் இந்திய வீரர்கள்!
3வது ஒருநாள்: கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவுக்கு சொந்தமாக போகும் புது சாதனை?
3வது ஒருநாள்: கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவுக்கு சொந்தமாக போகும் புது சாதனை?
#Preview கடைசி ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா?
#Preview கடைசி ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா?
மேற்கிந்திய தீவுகள் வீரர்களுடன் தண்ணீரில் ஆட்டம் போடும் இந்திய வீரர்கள்!
மேற்கிந்திய தீவுகள் வீரர்களுடன் தண்ணீரில் ஆட்டம் போடும் இந்திய வீரர்கள்!
"விரக்தியடைந்த யாரோ தான் இதை செய்திருப்பார்கள்" - கோலி-ரோஹித் குறித்து கவாஸ்கர்!
"விரக்தியடைந்த யாரோ தான் இதை செய்திருப்பார்கள்" - கோலி-ரோஹித் குறித்து கவாஸ்கர்!
Advertisement