தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்த தவானின் வீடியோவை வெளியிட்ட ரோஹித் ஷர்மா!

Updated: 21 September 2019 11:42 IST

தொடக்க வீரரான ஷிகர் தவான், தனக்கு தானே பேசிக்கொண்டிருப்பதை ரோஹித் ஷர்மா வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

Rohit Sharma Shares Hilarious Secret Video Of Shikhar Dhawan Talking To Himself On A Flight. Watch
தவான் மற்றும் கோலி இணைந்து 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். © Instagram

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்காக இந்திய அணி பெங்களூரு சென்றது. அப்போது, விமானத்தில் தொடக்க வீரரான ஷிகர் தவான், தனக்கு தானே பேசிக்கொண்டிருப்பதை ரோஹித் ஷர்மா வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். "இல்லை, அவர் என்னிடம் பேசவில்லை! கற்பனை நண்பர் வைத்துக்கொள்ளும் வயதும் கடந்து விட்டது. @shikhardofficial," என்ற பதிவுடன் பகிர்ந்தார். இந்த பதிவு விரைவில் ஷிகர் தவானின் கவனத்தை ஈர்த்தது. அவர் விமானத்தில் தனது செயல் குறித்து ஒரு பெருங்களிப்புடைய விளக்கம் கொடுத்தார். முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கும் இதற்கு சிரிக்கும் இமோஜிகளை பதிவிட்டார்.

"அவர் வீடியோ எடுத்தபோது, நான் கவிதை படித்து கொண்டிருந்தேன். நான் மகிழ்ச்சியாக நேரத்தை கழித்து கொண்டிருந்தேன். அத்தகைய ஆர்வத்துடன் நானும் படித்திருக்கலாம் என்று விரும்புகிறேன்," என்று ஷிகர் தவான் கமெண்ட் செய்தார்.

lrsvc3rg

தென்னாப்பாரிக்காவுக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது இந்தியா. முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியை 7 விக்கெட் வித்தியாசத்தில், வென்று 1-0 என்று முன்னிலையில் உள்ளது இந்தியா.

150 இலக்கை துரத்தியபோது, குறைந்த ரன்களில் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தார். தவான் மற்றும் கோலி இணைந்து 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

கோலி 72 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் ஆனார். 19வது ஓவருக்கு இந்தியா இலக்கை எட்டு வெற்றி பெற்றது.

52 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தபோது, ​​இந்திய கேப்டன் கோலி ரோஹித்தை முந்திக் கொண்டு குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர் ஆனார்.

மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 3வது டெஸ்ட் மூன்றாவது நாள் #Scorecard
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 3வது டெஸ்ட் மூன்றாவது நாள் #Scorecard
3rd Test, Day 2: Rohit Sharma இரட்டை சதம்… பவுலர்கள் ஆட்டம் ஆரம்பம்!
3rd Test, Day 2: Rohit Sharma இரட்டை சதம்… பவுலர்கள் ஆட்டம் ஆரம்பம்!
"ரோஹித் என்ன செய்யப் போகிறார் என்பதில் கவனம் செலுத்தாதீர்கள்" - விராட் கோலி!
"ரோஹித் என்ன செய்யப் போகிறார் என்பதில் கவனம் செலுத்தாதீர்கள்" - விராட் கோலி!
"மும்பை ஆரே காலணியில் மரங்களை வெட்டாதீர்கள்" - மனம் வருந்தும் ரோஹித் ஷர்மா
"மும்பை ஆரே காலணியில் மரங்களை வெட்டாதீர்கள்" - மனம் வருந்தும் ரோஹித் ஷர்மா
இந்திய vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட்: அதிக சிக்ஸர்கள் அடித்த டெஸ்ட் போட்டி
இந்திய vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட்: அதிக சிக்ஸர்கள் அடித்த டெஸ்ட் போட்டி
Advertisement