Listen to the latest songs, only on JioSaavn.com
 

டிஎன்பிஎல் போட்டியில் வினோத பந்துவீச்சுக்கு பாராட்டு பெற்ற அஸ்வின்!

Updated: 23 July 2019 20:40 IST

20வது ஓவரை வீசிய அஸ்வின், பந்து வீச்சும் போது பந்தை பின்னால் மறைத்து வைத்து வந்து பந்து வீசினார். பந்து எந்த திசையில் வரும் என்பதை பேன்ஸ்மேன் கவனிக்க முடியாத அளவிற்கு அவர் பந்து வீசினார்.

Ravichandran Ashwin Gets Reward For Unique TNPL Bowling Action. Watch
டிஎன்பிஎல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸுக்காக ஆடிவரும் ரவிசந்திரன் அஸ்வின், புதுவிதமாக பந்து வீசி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். © Twitter

டிஎன்பிஎல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸுக்காக ஆடிவரும் ரவிசந்திரன் அஸ்வின், புதுவிதமாக பந்து வீசி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். 20வது ஓவரை வீசிய அஸ்வின், பந்து வீச்சும் போது பந்தை பின்னால் மறைத்து வைத்து வந்து பந்து வீசினார். பந்து எந்த திசையில் வரும் என்பதை பேன்ஸ்மேன் கவனிக்க முடியாத அளவிற்கு அவர் பந்து வீசினார். இதன் விளைவாக, ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பந்துவீச்சில் ஒரு விக்கெட் வழங்கப்பட்டது, அது ஆஃப் ஸ்பின்னரால் தூக்கி எறியப்பட்டது. டிஎன்பிஎல்லின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம், இந்த வீடியோவை பகிர்ந்து இப்படி பதிவிட்டது, "பந்துடனான என்னுடைய சோதனைகள் - ரவி அஸ்வின்".

வெள்ளிக்கிழமை அன்று நடைப்பெற்ற நடப்பு போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை சந்தித்தது. இந்த சம்பவம், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு ஒரு விக்கெட் மீதமிருக்கையில் 2 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் நடந்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக ஆடிவரும் அஸ்வின், இதுபோன்ற பந்துவீசியது பேட்ஸ்மேன் மற்றுமின்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்திலும் பரவி வைரலாகி வருகிறது.

கவுண்டி சாம்பியன்ஷிப் பிரிவு ஒன்றில் நாட்டிங்ஹாம்ஷையருக்காக இடம்பெற்ற பிறகு டி.என்.பி.எல். போட்டிகளில் இடம்பெற்றார். மூன்று போட்டிகளில் 20 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஸ்வின்.

ஐபிஎல் போட்டியில் ஜாஸ் பட்லரை அஸ்வின் 'மான்கடிங்' முறையில் அவுட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடந்த டிசம்பர் மாதம், அஸ்வின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கடைசியாக இந்திய அணிக்காக ஆடினார். 2017ம் ஆண்டு தான் ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் கடைசியாக ஆடினார்.

இதுவரை அஸ்வின், 65 டெஸ்ட், 111 ஒருநாள் மற்றும் 46 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடியுள்ளார். அதிக ஓவர்கள் கொண்ட போட்டிகளில் ஆடி இதுவரை 342 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 7/59 தான் அவரின் சிறந்த விக்கெட் கீப்பிங்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
“வீட்டை விட்டு வெளியே வந்தால் இதுதான் நிலைமை” - நகைச்சுவையாக ட்விட் செய்த அஸ்வின்!
“வீட்டை விட்டு வெளியே வந்தால் இதுதான் நிலைமை” - நகைச்சுவையாக ட்விட் செய்த அஸ்வின்!
கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் ட்விட்டர் பெயரை மாற்றிய அஸ்வின்!
கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் ட்விட்டர் பெயரை மாற்றிய அஸ்வின்!
“இந்தியாவுக்கு அடுத்த இரண்டு வாரங்கள் மிக முக்கியமானதாக இருக்கும்” - அஸ்வின்!
“இந்தியாவுக்கு அடுத்த இரண்டு வாரங்கள் மிக முக்கியமானதாக இருக்கும்” - அஸ்வின்!
“மன்கட்டையும் சேர்த்துக்கோங்க” - அஸ்வின் பதிவிட்ட வித்தியாசமான கரிக்குலம் விட்டே!
“மன்கட்டையும் சேர்த்துக்கோங்க” - அஸ்வின் பதிவிட்ட வித்தியாசமான கரிக்குலம் விட்டே!
புஜாரா பிறந்தநாளுக்கு குஜராத்தியில் வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
புஜாரா பிறந்தநாளுக்கு குஜராத்தியில் வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
Advertisement