2வது ஒருநாள்: "என்ன ஒரு டெடிக்கேஷன்"... ரிஷப் பன்ட்டை பாராட்டிய சஹால்!

Updated: 12 August 2019 14:19 IST

பேட்டிங்கிற்காக ரிஷப் பன்ட் பெரிதும் பாராட்டப்படுகிறார், விக்கெட் கீப்பிங் இன்னும் கற்றுக்கொள்ளும் முயற்சியில் உள்ளார்.

Rishabh Pant, Kuldeep Yadav Turn Hotel Corridor Into Practice Pitch Ahead Of 2nd ODI. Watch Video
இந்திய அணிக்கு பன்ட் அனைத்து வடிவங்களிலும் சிறந்த தேர்வு விக்கெட் கீப்பராக உள்ளார். © AFP

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணியில் இளம் வீரர்களான ரிஷப் பன்ட் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் இடம்பெற்றுள்ளனர். இருவரும் சிறப்பாக ஆடி வருகின்றனர். பேட்டிங்கிற்காக ரிஷப் பன்ட் பெரிதும் பாராட்டப்படுகிறார், விக்கெட் கீப்பிங் இன்னும் கற்றுக்கொள்ளும் இடத்தில் இருக்கும் அவர், ஃபீல்டில் மட்டுமல்லாது ஹோட்டலிலும் பயிற்சி செய்து வருகிறார். இரண்டாது ஒருநாள் போட்டிக்கு முன்பாக ரிஷப் பன்ட் ஹோட்டர் காரிடாரில் விக்கெட் கீப்பிங் பயிற்சி செய்து வந்தார். குல்தீப் யாதவ் பந்து வீச, அவர் கேட்ச் பிடித்து பயிற்சி மேற்கொண்டார். இந்த வீடியோவை பன்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

"எங்கே? எப்போது? என்ன? யார்.... இல்லை மன்னியுங்கள்... "எதற்கு" என்று எனக்கு தெரியும் :)  #passion #cricketforlife," வீடியோவுடன் இதை பதிவிட்டார் பன்ட்.

எதிரில் நின்று பேட்டிங் செய்வதில் கடினமான பந்து வீச்சாளர்களில் ஒருவரான குல்தீப் யாதவ், பந்தை கூர்மையாக வீசுவதை வீடியோவில் காணலாம்.

இராணுவ பட்டாலியனுக்கு சேவை செய்ய கிரிக்கெட்டில் இருந்து இரண்டு மாத ஓய்வு எடுத்துள்ள எம்.எஸ். தோனி இல்லாத நிலையில், இந்திய அணிக்கு பன்ட் அனைத்து வடிவங்களிலும் சிறந்த தேர்வு விக்கெட் கீப்பராக உள்ளார்.

இருவரும் காட்டிய அர்ப்பணிப்பு பல ரசிகர்களை அன்பான கருத்துக்களை தெரிவிக்க தூண்டியது மட்டுமல்லாமல், அவர்களது அணி வீரர் யுஸ்வேந்திர சஹாலையும் எழுதத் தூண்டியது: "என்ன ஒரு அர்ப்பணிப்பு".

முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக 13 ஓவர்கள் மட்டுமே விளையாடப்பட்டது.

இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி டக்வொர்த் லூயில் முறைப்படி 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
கே.எல். ராகுலின் சிறப்பான ஸ்டம்பிங் பிறகு பன்ட்டை கலாய்த்த ரசிகர்கள்!
கே.எல். ராகுலின் சிறப்பான ஸ்டம்பிங் பிறகு பன்ட்டை கலாய்த்த ரசிகர்கள்!
"பன்ட்டை Babysitter ஸ்லெட்ஜிங் செய்தது ஏன்" - காரணம் சொல்லும் டிம் பெயின்!
"பன்ட்டை Babysitter ஸ்லெட்ஜிங் செய்தது ஏன்" - காரணம் சொல்லும் டிம் பெயின்!
காதலி இஷா நேகியுடன் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடிய ரிஷப் பன்ட்!
காதலி இஷா நேகியுடன் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடிய ரிஷப் பன்ட்!
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளுக்கு இந்திய அணி அறிவிப்பு!
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளுக்கு இந்திய அணி அறிவிப்பு!
3வது ஒருநாள் போட்டிக்கு முன் வீரர்களுடன் நேரம் கழித்த விராட் கோலி!
3வது ஒருநாள் போட்டிக்கு முன் வீரர்களுடன் நேரம் கழித்த விராட் கோலி!
Advertisement