தேசியக் கொடிக்கு மரியாதை... நெகிழ வைத்த தல தோனி!

Updated: 11 February 2019 11:18 IST

மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி பந்துவீசிக் கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் தேசியக்கொடியுடன் தோனியை நோக்கி ஓடி வந்தார்.

MS Dhoni
இந்தியா vs நியூசிலாந்து மூன்றாவது டி20 போட்டியின் போது, ரசிகர் ஒருவர் தோனியை நோக்கி வந்து காலில் விழுந்தார். © Twitter

இந்திய முன்னாள் கேப்டன் தோனி மீண்டும் தன்னை நாட்டுப்பற்று மிக்கவர் என நிரூபித்துள்ளார். இந்திய நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி பந்துவீசிக் கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் தேசியக்கொடியுடன் தோனியை நோக்கி ஓடி வந்தார். அவர் தோனியில் காலில் விழுந்தார். அவரை தூக்கி விட்ட தோனி சட்டென்று தேசியக் கொடி தரையில் விழாமல் அவரிடம் இருந்து வாங்கி பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைத்தார். இந்த செயல் அனைவரையம் நெகிழ வைத்தது.

அந்த நிகழ்வின் நெகிழ்ச்சியான வீடியோ இது:

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. செய்ஃபெர்ட்டும், முன்ரோவும் முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்து இமாலய இலக்கை நிர்ணயித்தது நியூசிலாந்து.

பின்னர் இலக்கை துரத்திய இந்தியா சார்பில் விஜய் ஷங்கர் 28 பந்தில் 43 ரன்களும், அதிரடியாக ஆடிய பண்ட் 12 பந்தில் 28 ரன்கள், பாண்ட்யா 11 பந்தில் 21 ரன்கள் குவித்தனர்.

கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் 33 ரன்கள, க்ருணால் 26 ரன்கள் குவிக்க 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது.

Comments
ஹைலைட்ஸ்
  • மூன்றாவது டி20 போது தோனி செய்தது அனைவரையும் நெகிழ வைத்தது
  • தோனியின் காலில் விழ ரசிகர் ஒருவர் தடைகளை தாண்டி மைதானத்துக்குள் வந்தார்
  • மூன்றாவது டி20 போட்டியை வென்றதால், நியூசிலாந்து தொடரை வென்றது
தொடர்புடைய கட்டுரைகள்
ராணுவ வீரர்கள் பற்றி டிவி தொடரை தயாரிக்கவுள்ளார் தோனி!
ராணுவ வீரர்கள் பற்றி டிவி தொடரை தயாரிக்கவுள்ளார் தோனி!
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
"மறக்க முடியாத பயணம்" - சாக்‌ஷி தோனிக்கு நன்றி தெரிவித்த பாடகி ஜாஸ்ஸி கில்
"மறக்க முடியாத பயணம்" - சாக்‌ஷி தோனிக்கு நன்றி தெரிவித்த பாடகி ஜாஸ்ஸி கில்
"டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து தோனியிடம் கேளுங்கள்" - சவுரவ் கங்குலி
"டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து தோனியிடம் கேளுங்கள்" - சவுரவ் கங்குலி
"ஜனவரி வரை என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்" - எதிர்காலம் குறித்து தோனி!
"ஜனவரி வரை என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்" - எதிர்காலம் குறித்து தோனி!
Advertisement