மேக்ஸ்வெல்லை பெவிலியனுக்கு அனுப்பிய தோனியின் மரண மாஸ் ரன் அவுட்!

Updated: 09 March 2019 14:47 IST

மூன்றாவது ஒருநாள் போட்டியில் 42 பந்துகளை சந்தித்த தோனி 26 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ஆனால் ஆஸ்திரேலிய பேட்டிங்கின் போது தோனி மேக்ஸ்வெல்லை ரன் அவுட் செய்த விதம் அபாரமாகவும், சமயோஜிதமாகவும் இருந்தது.

MS Dhoni Produces Moment Of Magic To Run Out Glenn Maxwell In India vs Australia 3rd ODI
42வது ஓவரின் கடைசி பந்தில் ரவேந்திர ஜடேஜா துல்லியமாக பந்தை தோனியை நோக்கி வீச, அதை அவர் அப்படியே தட்டி விட பந்து ஸ்டெம்பை தாக்கியது. © AFP

இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடந்த மூன்றாவது போட்டியில் தோனி செய்த ரன் அவுட் இணையதளத்தில் வைரலானது. முன்னதாக ராயுடு கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறியதும் தோனி ஆட வந்தார். களத்தில் கேப்டன் கோலியுடன் தோனி ஜோடி சேர அரங்கமே தோனி... தோனி என்று அதிர்ந்தது. இதனை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் சிங்கம் தனது குகையில் கம்பீரமாக நடந்து வந்த போது என்று தோனி களமிறங்கும் படத்தை பதிவு செய்திருந்தது. 314 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தியா 48.2 ஓவரில் 281 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் 42 பந்துகளை சந்தித்த தோனி 26 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 

ஆனால் ஆஸ்திரேலிய பேட்டிங்கின் போது தோனி மேக்ஸ்வெல்லை ரன் அவுட் செய்த விதம் அபாரமாகவும், சமயோஜிதமாகவும் இருந்தது.

41.5 ஓவர் வரை ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. 42வது ஓவரின் கடைசி பந்தில் ரவேந்திர ஜடேஜா துல்லியமாக பந்தை தோனியை நோக்கி வீச அதனை தோனி கைகளால் பிடித்து ரன் அவுட் செய்யாமல், அப்படியே தட்டி விட பந்து ஸ்டெம்பை தாக்கியது. மேக்ஸ்வெல் அவுட் ஆனார். அதன் பின் ஆஸ்திரேலியா அடுத்த 5 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. 

31 பந்தில் 47 ரன்களை குவித்த மேக்ஸ்வெல்லை அவுட் செய்தது தான் ஆஸ்திரேலியாவின் இமாலய ஸ்கோரை கட்டுப்படுத்தியது. ஒரு கட்டத்தில் 350ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்கோர் 313ரன்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது. 

மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது இந்தியா. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா கவாஜாவின் அபார சதம், பின்ச் 93, மேக்ஸ்வெல் 47 என அதிரடியாக ரன் குவிக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்களை எடுத்தது ஆஸ்திரேலியா. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஷமி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் 314 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தியா 48.2 ஓவரில் 281 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்பினர். பின்னர் கோலி 123 ரன்களும், விஜய் சங்கர் 32 ரன்களு, ஜாதவ் , தோனி தலா 26 ரன்களும் குவித்தனர். ஆஸி தரப்பில் ஸம்பா, ரிச்சர்ட்ஸன், கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்று முன்னிலை வகிக்கிறது. நான்காவது போட்டி மொகாலியில் ஞாயிறன்று நடக்கிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • தோனி, மேக்ஸ்வெல்லை ரன் அவுட் செய்த விதம் அபாரமாக இருந்தது
  • ஜடேஜாவை ஸ்டம்பை நோக்கி பந்து வீச சொன்னார் தோனி
  • 3வது ஒருநாள் போட்டியை இந்தியா 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது
தொடர்புடைய கட்டுரைகள்
IPL 2020: "காட்டின் ராணி" சாக்‌ஷி தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சிஎஸ்கே!
IPL 2020: "காட்டின் ராணி" சாக்‌ஷி தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சிஎஸ்கே!
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
"அணியில் இணைகிறாரா தோனி?" - வைரலாகும் பயிற்சி வீடியோ
"அணியில் இணைகிறாரா தோனி?" - வைரலாகும் பயிற்சி வீடியோ
"தோனியின் அறிவுரை தான் எனக்கு இப்போதும் உதவுகிறது" - தீபக் சஹார்
"தோனியின் அறிவுரை தான் எனக்கு இப்போதும் உதவுகிறது" - தீபக் சஹார்
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் தோனி: தகவல்!
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் தோனி: தகவல்!
Advertisement