ட்ரைவ்... டின்னர்... அணி வீரர்களை அசத்திய மிஸ்டர் கூல் தோனி!

Updated: 07 March 2019 16:43 IST

கார் பிரியரான தோனி தனது காரில் அணி வீரர்களை ஏற்றிக்கொண்டு ஊர் சுற்றினார்.

MS Dhoni Turns Driver And Host For Team India In Hometown Ranchi
தோனியும், அவரது மனைவியும் இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் டின்னர் வழங்கினர். © Twitter

தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் மூன்றாவது ஒருநாள் போட்டி நடக்கவுள்ளது. இதற்காக இந்திய அணி ராஞ்சி சென்றது. அப்போது, கார் பிரியரான தோனி தனது காரில் அணி வீரர்களை ஏற்றிக்கொண்டு ஊர் சுற்றினார். இதன் வீடியோவை பிசிசிஐ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

பின்னர் தோனியும், அவரது மனைவியும் வீரர்கள் அனைவருக்கும் டின்னர் வழங்கினர். இதனை சாஹல் தனது ட்விட்டர் பக்கத்தில் செல்ஃபியுடன் "தோனி அண்ணனுக்கும், சாக்‌ஷி அண்ணிக்கும் நன்றி" என்று பதிவிட்டிருந்தார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Team India (@indiancricketteam7) on

72 பந்தில் 59 ரன்களை குவித்த தோனி ஒரு புதிய சாதனையையும் படைத்தார். 412 முதல் தர ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள அவர் 13,000 ரன்களை கடந்தார். இந்தச் சாதனையை எட்டும் நான்காவது இந்தியர் இவராவார். சச்சின், கங்குலி, ட்ராவிட் மட்டுமே இவருக்கு  முன் இந்தச் சாதனையை செய்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோனி கேதர் ஜாதவ் இணை 5வது விக்கெட்டுக்கு 141 ரன்கள் குவித்தது. இது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிகப்பெரிய 5வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாகும். 

தோனி, இந்த போட்டியில் 6 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடித்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக சிக்ஸர் அடித்தவர் என்ற சாதனையை தன் வசமாக்கினார். ரோஹித் மற்றும் தோனி இருவரும் 215 சிக்சர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளனர். 

தோனி மொத்தம் 223 சிக்சர்கள் அடித்துள்ளார். அதில் 7 ஆசிய லெவனுக்காக அடிக்கப்பட்டது.  

Comments
ஹைலைட்ஸ்
  • தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் மூன்றாவது ஒருநாள் போட்டி நடக்கவுள்ளது
  • கார் பிரியரான தோனி தனது காரில் அணி வீரர்களை ஏற்றிக்கொண்டு ஊர் சுற்றினார்
  • ராஞ்சி விமான நிலையத்தில் தோனிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
தொடர்புடைய கட்டுரைகள்
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
தோனியின் ஓய்வு வதந்தி:
தோனியின் ஓய்வு வதந்தி: 'Game of Thrones' வசனம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே!
"இதை வதந்தி என்பார்கள்" - தோனி ஓய்வு செய்தி குறித்து சாக்‌ஷி!
"இதை வதந்தி என்பார்கள்" - தோனி ஓய்வு செய்தி குறித்து சாக்‌ஷி!
"தோனியின் ஓய்வு செய்தி உண்மையில்லை" - தேர்வுக்குழு தலைவர் பிரசாத்!
"தோனியின் ஓய்வு செய்தி உண்மையில்லை" - தேர்வுக்குழு தலைவர் பிரசாத்!
Advertisement