Listen to the latest songs, only on JioSaavn.com
 

16 பந்துகளில் 74 ரன்கள்: நான்கே ஓவரில் சேஸிங்கை முடித்த முகமது ஷெஷாத்!

Updated: 23 November 2018 09:06 IST

முகமது ஷெஷாத், 12 பந்துகளில் அரைசதமடித்தது மட்டுமின்றி 16 பந்துகளில் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் எட்டு சிக்சர்களும் , ஆறு பவுண்டரிகளும் அடங்கும்

Watch: Mohammad Shahzads 16-Ball 74 Sets T10 League On Fire
டி10 போட்டிகளில் அதிவேக அரைசதமடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார் முகமது ஷெஷாத். © Twitter

டி10 போட்டிகளின் இரண்டாவது சீஸன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்துவருகிறது. சிந்திஸ் அணிக்கும் ராஜ்புத் அணிக்கும் இடையேயான போட்டியில் முதலில் ஆடிய சிந்திஸ் அணி 10 ஓவரில் 94 ரன்கள் குவித்தது. 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய ராஜ்புத் அணி, அதிரடியாக ஆடி ரன்களை குவித்தது.

ராஜ்புத் அணிக்கு துவக்க வீரர்களாக ஆப்கானிஸ்தானின் முகமது ஷெஷாத்தும், நியூஸிலாந்தின் மெக்குல்லமும் களமிரங்கினர். முகமது ஷெஷாத் அதிரடியின் உச்சத்துக்கே சென்றார். 12 பந்துகளில் அரைசதமடித்தது மட்டுமின்றி 16 பந்துகளில் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் எட்டு சிக்சர்களும் , ஆறு பவுண்டரிகளும் அடங்கும். 

டி10 போட்டிகளில் அதிவேக அரைசதமடித்தவர் என்ற சாதனையை படைத்தார். அதுமட்டுமின்றி 95 ரன்களை 4 ஓவர்களில் சேஸ் செய்து ராஜ்புத் அணி புதிய சாதனையையும் படைத்தது.

சிந்திஸ் அணியின் நவாஸ், ஆர்சர், மெரேரா மற்றும் ஃபவாத் அகமது ஆகிய நான்கு பந்துவீச்சாளர்கள் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் 20 ரன்களுக்கு அதிகமாக ரன்கள் குவிக்கப்பட்டது.

மெக்குல்லம் 8 பந்துகளில் 21 ரன்கள் குவித்தார். இந்த இணை 24 பந்துகளில் 96 ரன்கள் குவித்தது. இதன் மூலம் சிந்திஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்திய அணியிலும், 2017க்கு பிறகு ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடாமல் இருக்கு இந்திய வேகப்பந்துவீச்சாளர் முனாஃப் பட்டேல் ராஜ்புத் அணிக்காக பந்துவீசி 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக் கோப்பை 2019: காயம் காரணமாக விலகிய ஆப்கானிஸ்தான் வீரர் முகமது ஷஷாத்!
உலகக் கோப்பை 2019: காயம் காரணமாக விலகிய ஆப்கானிஸ்தான் வீரர் முகமது ஷஷாத்!
உலகக் கோப்பையில் வைரலான ஷெஷாத், ரஷித் டான்ஸ்!
உலகக் கோப்பையில் வைரலான ஷெஷாத், ரஷித் டான்ஸ்!
16 பந்துகளில் 74 ரன்கள்: நான்கே ஓவரில் சேஸிங்கை முடித்த முகமது ஷெஷாத்!
16 பந்துகளில் 74 ரன்கள்: நான்கே ஓவரில் சேஸிங்கை முடித்த முகமது ஷெஷாத்!
Advertisement